ஆப்பு வச்சுருச்சே அரசு.. முடங்கப் போகும் அரசு கேபிள்? புலம்பும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்.. என்ன நடக்குது?
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் டேக் டிவி எனப்படும் அரசு கேபிள் டிவி ( tamil nadu arasu cable tv corporation limited - tactv) செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பிரச்சனைகளால் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்து தங்களுக்கு உரிமம் புதுப்பிக்கப்படாததால் மாவட்ட கேபிள் விநியோகஸ்தர்கள் ஒளிபரப்பை நிறுத்தலாமா? என யோசித்து வருவதால் அரசு கேபிள் டிவி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது இது மட்டுமல்லாமல் டிடிஎச் சேவையிலும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் களத்தில் உள்ளது. இந்த நிலையில் அதிகமான கட்டணம் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டுகளுக்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து அனலாக் முறையில் 200-க்கும் மேற்பட்ட சேனல்கள் 200 ரூபாய் என்ற கட்டணத்தில் வழங்கப்பட்டு வழங்கப்பட்டது.
அரசு கேபிள் டிவி
தொடர்ந்து ட்ராய் அனைத்து கேபிள் சேவைகளையும் டிஜிட்டலுக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவனமும் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை வழங்கி வருகிறது. தற்போது தனியாருக்கு போட்டி அளிக்கும் வகையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அரசு கேபிள் டிவி எச்டி தரத்துக்கு மாறி இருக்கிறது.
கேபிள் டிவி ஆபரேட்டகள்
அதன் பின்னர் தமிழ்நாடு அரசு கேபிள்டிவியில் பல்வேறு சீர்திருத்தங்களையும் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்து மேம்படுத்தியதோடு, அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் 8 ஆண்டு கால கோரிக்கையான எச்டி உயர்வரையரை செட்டாப்பாக்ஸ், தடையில்லாத சிக்னல் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு நிகராக உள்ளூர் சேனல்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இதனையடுத்து அரசு கேபிள் டிவியிலிருந்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி தனியார் நிறுவனத்திற்கு சென்ற ஆப்பரேட்டர்கள் மீண்டும் அரசு கேபிள்டிவியில் இணைந்து கேபிள்டிவி சேவையை பெற்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
விநியோகஸ்தர்கள்
தற்போது கிட்டத்தட்ட 12 லட்சம் அரசு கேபிள் டிவி இணைப்புகள் வழங்கப்பட்டு அரசு கேபிள் டிவி நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தான் அதில் சிக்கல் முளைத்திருக்கிறது. அதாவது தங்கள் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என மாவட்ட கேபிள் டிவி விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். மற்றொன்று சர்வர் பிரச்சனை.
புதுப்பிக்கப்படாத உரிமம்
அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் மாவட்ட கேபில் விநியோகஸ்தர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் மூலமாக தான் அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கும் சென்னையிலிருந்து பெறப்பட்ட சிக்னல் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கடந்த ஆட்சி காலத்தில் உரிமம் புதுப்பித்து தராமல் இருந்தது. தற்போதும் அதே நிலை தொடர்வதால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லாமல், என்றைக்காவது நல்லது நடக்கும் என்று என்று காத்திருக்கின்றனர் அவர்கள். ஆனால் அவர்களுக்கு நல்ல 'சிக்னல்' கிடைக்காததால் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு நாள் அரசு கேபிள் ஒளிபரப்பை நிறுததலாமா என்றும் யோசித்து வருகின்றனர்.
சர்வர் முடக்கம்
பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் ஏதாவது விமோசனம் கிடைக்குமா என்று காத்திருக்கின்றனர். மற்றொன்று ஏற்கனவே சொன்னது போல மற்றொரு பிரச்சனை சர்வர் முடக்கம் தற்போது டேக் டிவியில் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் விபரங்கள், சேனல் தொகுப்புகள், செட்டாப் பாக்ஸ் இணைப்புகள் உள்ளிட்டவற்றின் செயல்பாடு அனைத்தும் எஸ்-எம்-எஸ் சர்வர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சர்வர் பிரச்சினை ஏற்பட்டு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சேவை ரத்து
மேலும் இதற்காக சாப்ட்வேர் சேவைகளை வழங்கும் மந்த்ரா நிறுவனத்திற்கும் தமிழக அரசு பணம் வழங்கவில்லை. இதனால் அந்த நிறுவனம் சேவையை நிறுத்திவிட்டது. இதன் காரணமாகவே தற்போது சர்வர் முடங்கி உள்ளதாகவும், இதனால் ரீசார்ஜ் செய்ய முடியாமல் ஆப்பரேட்டர்கள் தவிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு முறை அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் சேவைகள் முடங்கும் அச்சம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
