ஒரு மாதத்தில் 10 குழந்தைகள் மாயம்.. விழித்துக்கொள்ளுமா தவெக அரசு? விஜய்க்கு கடும் நெருக்கடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 10 குழந்தைகள் காணவில்லை என்றும், அதை கண்டுபிடிக்கும் விஷயத்தில் தொய்வுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் 'சவுத் பர்ஸ்ட்' ஊடகத்தில் வெளியான கட்டுரை கவனம் பெற்றிருக்கிறது.

செப்.24 தொடங்கி அக்.24 வரை தமிழகத்தில் மொத்தம் 10 பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள். முதல் சம்பவம் செப்.25 அன்று நடந்தது.

children missing

ராணிப்பேட்டை மாவட்டத்தில், சாலையோரம் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மகேஸ்வரி எனும் 1 வயது குழந்தை கடத்தப்பட்டிருக்கிறது. 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனாலும், இன்னமும் அந்த குழந்தை மீட்கப்படவில்லை.

இரண்டாவது சம்பவம் அக்.12ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. ஹேமலாதா எனும் 7 வயது சிறுமி, அன்றுதான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால், சில மணி நேரங்களில் சிறுமியை காணவில்லை. 10 நாட்களுக்கு பிறகும் சிறுமி கிடைக்காததால், வழக்கு CB-CID பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து, அக்.23ல் கிருஷ்ணகிரியில் 12 வயது சஞ்சய், காணவில்லை என்று புகார் எழுந்தது. ஆனால், இந்த சிறுவன் சென்னையில் தற்போது மீட்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அக்.16ல் ஸ்ரீபெரும்புதூரில் காணாமல் போன ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஆகியோரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.

இது தவிர, அக்.23 அன்று தூத்துக்குடியில் காணாமல் போன பிளெஸ்ஸி மற்றும் பிரின்சா பாப்பா ஆகியோர் கொஞ்ச நேரத்திற்கு பின்னர் மீட்கப்பட்டனர். சென்னை குரோம்பேட்டையில் தேவதர்ஷன், யுவனேஷ், பூஜா, குஷி ஆகிய 4 மாணவர்கள் காணாமல் போன நிலையில், அடுத்த நாள் அவர்கள் திருநீர்மலை ஏரியில் சடலமாக மீட்கப்பட்டனர்.

ஆக சில குழந்தைகள் உடனே கண்டுபிடிக்கப்பட்டாலும், சில குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து ஓய்வுப்பெற்ற SP எம்.கருணாநிதி 'சவுத் பர்ஸ்ட்' ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, "தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், காவல்துறை இன்னும் பழைய முறைகளையே பின்பற்றுகிறது. நவீன வசதிகளை முழுமையாக பயன்படுத்துவதில்லை. முன்னரெல்லாம் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உள்ளூர் போலீசாருக்கு பகுதியில் உள்ள அனைவரையும் தெரியும். தற்போது அந்த தொடர்பு விடுபட்டிருப்பதால், குற்றங்களுக்கான ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அறிகுறிகளை போலீசாரால் கண்டறிய முடிவதில்லை.

தற்போதைய காவலர்கள் பலர் பட்டதாரிகளாக இருந்தாலும், அவர்கள் வெறும் உத்தரவுகளை பின்பற்றுபவர்களாக மட்டுமே நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி, அங்குள்ள மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தகவல்களை சேகரிக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். பெரிய அசம்பாவிதம் நடந்த பிறகு தனிப்படைகள் அமைப்பதை விட, உள்ளூர் நிலையங்களிலேய குற்றங்களை தடுப்பதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+