அடியோடு மாறும் பாடத்திட்டம்.. கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய செய்தி.. தமிழ்நாடு அரசு அதிரடி!
சென்னை: புதிய மாதிரி பாடத்திட்டத்தை (Model Syllabus) 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இந்தியா முழுக்க புதிய தேசிய கல்விக்கொள்கையை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. கல்வி மற்றும் திறன் மேம்பாடு மீது கவனம் செலுத்தும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வரும் முனைப்பில் உள்ளது. அதோடு மூன்றாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்றும், விருப்ப அடிப்படையில் மாணவர்கள் மூன்றாவது மொழியை தேர்வு செய்யலாம் என்றும் இந்த புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையை பல்வேறு மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசும் புதிய தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதே புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து இருந்தது. ஆட்சிக்கு வந்த போதும் புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து வந்தது. அதிலும் மும்மொழி திட்டம் காரணமாக புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பலைகள் ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் இதுவரை தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை அமலுக்கு வராத நிலையில், தமிழ்நாட்டுக்கு என்று தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசும் கூறி உள்ளது.புதிய மாதிரி பாடத்திட்டத்தை (Model Syllabus) 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்து வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், 26-08-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த, மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை தமிழ் நாடு அரசு மதித்து அங்கீகரிக்கிறது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும்.
பாடப்பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணைப் பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த, மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2018 - 2019க்குப் பின், சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படவில்லை.
இதை ஈடுசெய்யும் வகையில் இந்த, மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் (2023-2024) மிகத் தரமாக மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் உயரிய நோக்கம் ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடையே சரியாக சென்றடையும் பொருட்டு இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது.
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க 30-9-2021, 1-11-2021 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற சட்டம் 1992 பிரிவு 10 (2) (H) விதியின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள்,
தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 922 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு. தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள்) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, தொழில் முனைவு மற்றும் திறன்மேம்பாட்டு அம்சங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இம்மாதிரிப் தொழில் துறை வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து வளர்ந்து வரும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப B.Sc. Artificial Intelligence, B.Sc. Internet of things, B.Sc. Computer Science, Artificial Intelligence and Machine Leaming, B.Sc. Computer Science with Block Chain Technology, B.Sc. Computer Science with Augmented Reality and Virtual Reality போன்ற பல புதிய மாதிரிப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களைப், பல்கலைக்கழக பாடத்திட்டக்குழுக்களின் (Board of Studies) ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைத்தன. இதன் அடிப்படையில், 90 சதவீத உயர்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் கீழ்க்காணும் ஐந்து பிரிவுகள் இடம் பெற்றுள்ளன :- பகுதி | மொழி பகுதி || ஆங்கிலம் பகுதி III முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்கள் பகுதி IV திறன் மேம்பாட்டுப் பாடங்கள் பகுதி V மதிப்புக் கூட்டுக்கல்வி. இப்பாடத் திட்டத்தில் உள்ள பகுதி I, பகுதி II, பகுதி III ல் உள்ள விருப்பப் பாடங்கள் (Elective papers), பகுதி IV, பகுதி V ல் உள்ள பாடங்களில் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் தேவைக்கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம்.
பாடங்களுக்கிடையே இணைத்தன்மை இருப்பதற்காக இப்பாடத்திட்டத்தில் பகுதி III இல் உள்ள முக்கிய பாடங்கள் (Core Papers) 75 சதவீதம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்து பல்கலைக்கழகங்கள் தெரிவிக்கப்படுகிறது. மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எதிரான கருத்து இந்த மாதிரி பாடத்திட்டத்தில் இல்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமையை மதிக்கும் நோக்கத்தில் மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் நலன் கருதி அமைக்கப்பட்ட இம்மாதிரி திட்டம் கீழ்காணும் உரிமைகளை பாதுகாக்கிறது :-

பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிநிலையில் (work load or service condition) எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியப் பாடங்களையும் (core papers), விருப்பப் பாடங்களையும் (Elective Papers) செய்முறை பயிற்சிகளையும் (practicals) பருவங்களுக்கிடையே (semesters) மாற்றிக் கொள்ளலாம்.
பல்கலைக்கழகங்களும், தன்னாட்சிக் கல்லூரிகளும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பீடுகளில் (Assessment) மாற்றங்கள் செய்து கொள்ள உரிமை உண்டு. அவர்களின் தன்னாட்சி உரிமைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது.
இந்த கல்வி ஆண்டு முதல் (2023-2024) நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் ஏதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும்.
மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் 02.08.2023 அன்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துக்கள் கேட்டு தீர்வு காணப்படும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது, என்று அறிவித்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications