வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும் நாளையும் சிறப்பு முகாம்... பயன்படுத்திக்கங்க
வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல். திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக இன்று சனிக்கிழமையும் நாளை 22ஆம் தேதி ஞாயிறு கிழமையும் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பொதுமக்களின் பார்வைக்கு நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் இருந்தால் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வருகிற டிசம்பர் 15ஆம் தேதிக்குள் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலா்களிடம் வழங்கலாம்.
மேலும் பொதுமக்கள் நலன் கருதி இன்று 21 நாளை 22ஆம் தேதியும் 2 நாட்கள் வாக்காளா்கள் சோ்ப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றது.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும் மற்றும் திருத்தம், நீக்கம் குறித்தும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். இந்த தினங்களில் தவற விட்டவர்கள் டிசம்பர் மாதம் 12.12.2020,13.12.2020 ஆகிய தேதிகளில் மீண்டும் முகாம் நடைபெற உள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1
முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேஷன் அட்டை
5.வங்கி கணக்கு புத்தகம்
6.ஆதார் கார்டு

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.10ம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான் கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுனர் உரிமம்
6.பாஸ்போர்ட்
7.கிசான் கார்டு
அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.பான் கார்டு
2.ஓட்டுனர் உரிமம்
3.ரேஷன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்
6.10ம் வகுப்பு சான்றிதழ்
7.மாணவர் அடையாள அட்டை
8.ஆதார் கார்டு
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications