தமிழக சட்டபை தேர்தல்.. தபால் வாக்குகள் ஆட்சியை தீர்மானிக்குமா? .. அசர வைக்கும் பதிவு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 28 ஆயிரத்து 159 தபால் ஓட்டுகள் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் வழக்கமாக தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தபால் வாக்குகள் போட அனுமதி உண்டு. ஆனால் இந்த முறை 80வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், பணியில் உள்ள ரயில்வே பணியாளர்கள், பணியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் என பலருக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேர்தல் பணியில் உள்ள 4 லட்சத்து 91 ஆயிரம் பேரும் தபால் வாக்குகள் அளிக்க உள்ளனர். அந்த வகையில் மொத்தம் கிட்டத்தட்ட 6.5லட்சத்திற்கும் அதிகமான தபால் வாக்குகள் போடப்பட உள்ளது.

எவ்வளவு வாக்குகள்
தற்போதைய நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுக்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 282 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது அதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 202 தபால் ஓட்டுகள் போடப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தவர்கள்
மாற்றுத்திறனாளிகளில் 28 ஆயிரத்து 531 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தது. அதில் 28 ஆயிரத்து 159 பேர் தபால் ஓட்டுகள் போட்டிடுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு 28 பேர் தபால் ஓட்டு அளித்திருக்கிறார்கள்.

எவ்வளவு வாக்குகள்
மொத்தமுள்ள 4 லட்சத்து 91 ஆயிரத்து 27 தேர்தல் பணியாளர்களில் 2 லட்சத்து 592 பேர் தபாலில் வாக்களித்துள்ளார்கள். மீதமுள்ளவர்கள் வாக்கு எண்ணும் மே 2ஆம் தேதி காலை 8 மணிக்குள் தபால் ஓட்டை அளிக்க போகிறார்கள்.

என்ன நடக்கும்
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தபால் வாக்குகளே ஆட்சியை தீர்மானிக்கும் நிலை வரலாம். மிகக்குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள பல தொகுதிகளின் வெற்றியை தபால் வாக்குகள் தான் கடந்த முறை தீர்மானித்தன. எனவே அதுபோன்ற நிலை வருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications