ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட்
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கட்சி வாரியாக முக்கிய பிரபலங்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டனர் என்பது பற்றிய சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தமிழக சட்டசபை தேர்தலில் 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சியில் அமர்ந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானார். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவரானார்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி (மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி) 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் திமுக 133 (உதயசூரியன் சின்னத்தில் நின்ற பிற கூட்டணி கட்சிகளையும் சேர்த்து), காங்கிரஸ் 18, விடுதலை சிறுத்தைகள் 4, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 வெற்றி பெற்றன.
அதேவேளையில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 66, பாமக 5, பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் தற்போது 2026 சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்பட பல கட்சிகளின் முக்கிய பிரபலங்கள் போட்டியிட்ட தொகுதிகளின் விவரங்களை இங்கு பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலின்
திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் 2021ல் சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 1,05,522 வாக்குகள் பெற்றார். இது 60.86 சதவீதமாகும். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஆதி ராஜாராம் 35,138 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் ஸ்டாலின் 70,384 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் களமிறங்கி வாகை சூடினார். இது அவரது முதல் சட்டசபை தேர்தலாகும். இந்த தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் மொத்தம் 93,285 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாமக வேட்பாளர் கசாலி 23,930 ஓட்டுகள் வாங்கினார். இதனால் உதயநிதி ஸ்டாலின் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் 1,63,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது 66.27 சதவீத வாக்குகளாகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 69,352 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி மொத்தம் 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஓ பன்னீர் செல்வம்
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி றெப்றார். மொத்தம் 1,00,050 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்த திமுகவின் தங்க தமிழ் செல்வன் 89,029 ஓட்டுகள் பெற்றார். இதனால் ஓ பன்னீர் செல்வம் 11,021 வாக்குகளில் வெற்றி பெற்றார். தற்போது ஓ பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் 51,481 வாக்குகள் பெற்ற நிலையில் பாஜகவின் வானதி சீனிவாசன் 53,209 ஓட்டுகள் வாங்கி 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் உள்ளது.
சீமான்
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டடு 3ம் இடம் பிடித்தார். அவர் மொத்தம் 48,597 ஓட்டுகள் பெற்றார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கேபி சங்கர் 88,185 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே குப்பன் 50,524 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார்.
நயினா் நாகேந்திரன்
தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 92,282 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஏஎல்எஸ் லட்சுமணன் 69,175 வாக்குகள் பெற்று 23,107 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மத்திய அமைச்சர் எல் முருகன்
மத்திய இணையமைச்சர் எல் முருகன் பாஜக சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். திமுக வேட்பாள் கயல்விழி 89,986 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். எல் முருகன் 88,593 வாக்குகள் பெற்று வெறும் 1,393 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அண்ணாமலை
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் அண்ணாமலை மொத்தம் 68,553 வாக்குகள் பெற்றார். இங்கு திமுக வேட்பாளர் இளங்கோ 93,369 ஓட்டுகள் வாங்கி அண்ணாமலையை 24,816 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் டிடிவி தினகரன் மொத்தம் 56,153 ஓட்டுகள் வாங்கினார். அதிமுகவின் கடம்பூர் ராஜு 68,556 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். கடம்பூர் ராஜுவிடம், டிடிவி தினகரன் 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
-
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா!












Click it and Unblock the Notifications