ஸ்டாலின் தான் வர்றாரு.. மொத்தமாய் அதிமுகவை காலி செய்யும் திமுக! தவெக டோட்டல் டேமேஜ்! நக்கீரன் சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக நூத்தி எழுவத்தைந்து தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்கவைக்கும் என நக்கீரன் சர்வே கூறியுள்ளது அதிமுக 52 தொகுதிகளில் வெள்ள வாய்ப்பு இருப்பதாகவும் 7 தொகுதிகளில் இழுபறி இருக்கலாம் என்கிறது நக்கீரன் சர்வே.திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முழுமையாக கைப்பற்றும் என்றும், பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தளத்தில் இறங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் ஒரு தொகுதியில் கூட வெல்லாது என்றும் நக்கீரன் சர்வே சொல்கிறது.

பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என திமுகவும் இரண்டாவது முறையாக ஆட்சியை இழக்கக்கூடாது என அதிமுகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

Tamil Nadu Assembly Election 2026 Nakkheeran Vijay

இந்த தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மனநிலை, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு பெண்கள் நலத்திட்டங்கள் கடந்து ஐந்தாண்டு கால திமுக சாதனைகளை சொல்லி திமுக வாக்கு கேட்டு வருகிறது.

இந்த இரு கட்சிகள் மட்டும் அல்லாது தமிழக வெற்றி கழகம் விஜயை மட்டுமே நம்பி களமிறங்கி இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனமான நக்கீரன் 2026 தேர்தல் வெற்றி யாருக்கு என்ற மெகா சர்வே ரிசல்ட்டை வெளியிட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான ரிசல்ட் முதற்கட்ட சர்வே கடந்த 17ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில் மீதமுள்ள பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான ரிசல்ட் தற்போது வெளியிட்டிருக்கிறது நக்கீரன். இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த சர்வேயிலும் திமுகவின் முன்னிலை வகிக்கிறது. இதுவரை வெளியான மொத்த சர்வே அடிப்படையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 175 தொகுதிகளில் திமுக வென்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்கிறது நக்கீரன் சர்வே.

அதிமுக பாஜக கூட்டணி 52 தொகுதிகளில் வெல்லும் எனக் கூறியிருக்கிறது. மேலும் ஏழு தொகுதிகளில் இழுபறி நீடிப்பதா நக்கீரன் கணித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முழுமையாக கைப்பற்றும் என்கிறது. அதே இதேபோல ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூ,ர் தஞ்சாவூர், ராமநாதபுரம், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்கிறது. பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தளத்தில் இறங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் ஒரு தொகுதியில் கூட வெல்லாது என்றும் நக்கீரன் சர்வே சொல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+