Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல், வழக்கமான திமுக-அதிமுக மோதலைத் தாண்டி, புதிய அரசியல் சக்திகள் களமிறங்குவதால் மிகவும் வித்தியாசமான தேர்தலாக மாறி வருகிறது. கடந்த சில தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இந்த முறை புதிய கட்சிகளும், புதிய முகங்களும் அதிகமாக அரசியல் களத்தில் குதித்துள்ளன. இதனால் 2026 தேர்தல் மும்முனை அல்லது நான்கு முனைப் போட்டியாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமாக திமுக அதிமுக என்ற மோதலை தாண்டி தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட புதிய அரசியல் சக்திகள் களமிறங்குவதால் ஐந்துமுனை போட்டி கொண்ட வித்தியாசமான தேர்தலாக மாறி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியைத் தாண்டி தேர்தலில் பழுத்த அனுபவம் கொண்ட ராமதாசும், சசிகலாவும் இந்த முறை தனியாக கட்சி ஆரம்பித்து ஜூனியர்களாக களமிறங்குவதும் 2026 தேர்தல் போட்டியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 tvk ramadoss

2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தயாராகி வருகிறது. தமிழக அரசியலைப் பொறுத்தவரை எப்போதும் திமுகவும் அதிமுகவும் தான் நீண்ட காலமாக பிற கட்சிகளை வழி நடத்தி வருகிறது. அவர்கள் தான் பிரதான சக்திகளாகவும் இருந்து வருகின்றன. ஆனால் 2026 தேர்தலில் அந்த பாரம்பரிய அரசியல் கணக்கை மாற்றும் வகையில் சில புதிய சக்திகள் களமிறங்கியுள்ளன.

அதில் முக்கியமாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் மிகப் பெரிய புதிய சக்தியாக பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே கட்சி கட்டமைப்பு, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமனம், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றின் மூலம் தவெக தனது அடித்தளத்தை வலுப்படுத்தி வருகிறது. இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு தனி வரவேற்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவத்துடன், இந்த முறை மேலும் வலுவாக களம் இறங்கத் திட்டமிட்டு வருகிறது. கடந்த 2021 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட அனுபவம், இந்த முறை நாம் தமிழருக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. சீமான் தொடர்ந்து தனித்த அரசியல் பாதையை பின்பற்றி வருவதால், இளைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூக வாக்குகளை ஈர்க்கும் திறன் அவரிடம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதனுடன், சில சிறிய மற்றும் பிராந்திய கட்சிகளும் இந்த முறை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமூக அடிப்படையிலான கட்சிகள் மற்றும் புதியதாக உருவான அரசியல் அமைப்புகள் சில தொகுதிகளில் முடிவுகளை மாற்றும் வகையில் செயல்படலாம். மேலும், சில அரசியல் இயக்கங்கள் கட்சிகளாக மாறும் முயற்சியிலும் உள்ளன. இவை நேரடியாக வெற்றி பெறவில்லை என்றாலும், பெரிய கட்சிகளின் வாக்கு விகிதத்தை பாதிக்கும் சக்தியாக இருக்கலாம்.

2026 தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகியவற்றோடு நாம் தமிழர் மற்றும் நாம் தமிழர் போன்ற புதிய சக்திகள் தனித்த பாதையில் சென்றால், பல தொகுதிகளில் நான்கு முனைப் போட்டி உருவாகும் சூழல் தான் இருந்தது. குறிப்பாக நகர்ப்புறங்களில் மற்றும் இளைஞர்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் புதிய கட்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.

புதிய சக்திகள் களமிறங்குவது, ஒரு வகையில் பெரிய கட்சிகளுக்கு சவாலாக இருந்தாலும், மற்றொரு வகையில் சில கட்சிகளுக்கு மறைமுகமாக சாதகமாகவும் அமையலாம். குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிக்கும் நிலை உருவானால், அதனால் நேரடியாக பலன் அடைவது யார் என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகே தெளிவாகும்.

இது மட்டுமல்லாமல் பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த முறை சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். ராமதாஸும் சசிகலாவும் இதுவரை பல தேர்தல்களை சந்தித்து இருந்தாலும், தனித்து தேர்தலை சந்திப்பது இதுதான் முதல் முறை. இதனால் தற்போது தமிழக சட்டசபை தேர்தலில் ஐந்து முனை போட்டி இருக்கிறது. இதில் திமுக அதிமுக தவிர்த்து தவெக உள்ளிட்ட கட்சிகள் புதிய அரசியல் சக்திகளாக இருப்பதால் எப்போதும் இல்லாத போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+