தமிழ்நாடு, புதுவை உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!
சென்னை: தமிழ்நாடு, புதுவை, மேற்கு வங்கம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த தேர்தலின் போது பிப்ரவரி கடைசியில் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் தான் வெளியாக வாய்ப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுவை,அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதாவது, தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று நிறைவடைகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல்கள்
புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் 15-6-2026-யில் முடிவடைகிறது. இதுபோல் மேற்கு வங்க சட்டப்பேரவை 7-5-2026 ம், அசாம் சட்டப்பேரவை 20-5-2026-லும், கேரள சட்டப்பேரவை 23-5-2026 லும் நிறைவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தான், தேர்தலுக்கான தேதி அட்டவணை மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:- தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
தேர்தல் தேதி எப்போது?
தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். தேர்தலுக்கான தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அசாமில் முகாமிட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிந்துள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டு மார்ச் மாத மத்தியில்தான் வெளியிடப்படும். பள்ளி இறுதி தேர்வுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாடு உளிட்ட மாநிலங்கள் வைத்த பரிந்துரை செய்துள்ளன. இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத்தெரிகிறது.
இறுதி வாக்காளர் பட்டியல்
கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அசாமில் 3 கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாடு, புதுவை, கேரளாவில் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 2 ஆம் தேதி 5 மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்னப்பட்டன.
தமிழகத்தில் எஸ்.ஐஆர் பணிகள் முடிந்து வரும் 23 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. கேரளாவில் 21 ஆம் தேதியும் மேற்கு வங்கத்தில் 28 ஆம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. அசாமில் கடந்த 10 ஆம் தேதியே வெளியானது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications