Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலை விடத் தேர்தல் ஜூரம் தகிக்கத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகக் கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், தற்போதைய 'மூட்' என்ன என்பதைப் படம்பிடித்துக் காட்டியுள்ளன பல்வேறு முக்கியக் கருத்துக்கணிப்புகள். 'மீண்டும் உதயசூரியனா?' அல்லது 'ட்விஸ்ட் தருவாரா விஜய்?'..

tamil nadu assembly elections 2026 dmk aiadmk

கோட்டையைத் தக்கவைக்கிறாரா ஸ்டாலின்?

'லோக் போல்' (Lok Poll) மற்றும் 'போல் ட்ராக்கர்' (Poll Tracker) ஆகிய இரண்டு ஏஜென்சிகளுமே ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

லோக் போல் கணிப்பு: திமுக கூட்டணி 181 முதல் 189 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்கிறது. இக்கூட்டணியின் வாக்கு வங்கி 40.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போல் ட்ராக்கர் கணிப்பு: இதுவும் திமுக கூட்டணிக்குச் சாதகமாகவே உள்ளது. 172 முதல் 178 இடங்கள் வரை திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என்றும், சுமார் 42.7 சதவீத வாக்குகளை அவர்கள் அறுவடை செய்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ரேஸில் முன்னிலை: மக்களின் விருப்பமான முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உள்ளனர்.

விஜய்யின் 'என்ட்ரி'... யாருக்குப் பாதிப்பு?

தமிழக அரசியலில் முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK), முதல் ஆட்டத்திலேயே கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனத் தெரிகிறது.

வாக்கு சதவீதம்: லோக் போல் கணிப்பின்படி 23.9% வாக்குகளையும், போல் ட்ராக்கர் கணிப்பின்படி 19.2% வாக்குகளையும் டிவி கே பெறும்.

இடங்கள்: இது 6 முதல் 12 இடங்கள் வரை அக்கட்சிக்குக் கிடைக்க வழிவகுக்கலாம்.

இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் அரசு மீது அதிருப்தியில் இருப்பவர்களின் வாக்குகளை விஜய் ஈர்க்கிறார். ஆனால், தனித்துப் போட்டியிடுவதால் இந்த வாக்குகள் அனைத்தும் இடங்களாக மாறுவதில் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக, எதிர்க்கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பது திமுகவிற்கே 'மெகா' அட்வாண்டேஜாக மாறியுள்ளது.

தடுமாறுகிறதா அஇஅதிமுக?

எதிர்க்கட்சியான அஇஅதிமுக - பாஜக கூட்டணி இந்த முறை கடும் சவாலைச் சந்திப்பதாகக் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

சறுக்கல்: லோக் போல் கணிப்பின்படி 38 - 42 இடங்களும், போல் ட்ராக்கர் கணிப்பின்படி 46 - 52 இடங்களும் மட்டுமே அஇஅதிமுக கூட்டணிக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

காரணங்கள்: உட்கட்சிப் பூசல், முக்கியத் தலைவர்களின் வெளியேற்றம் மற்றும் டெல்டா, தென் மாவட்டங்களில் நிலவும் தொய்வு ஆகியவை எடப்பாடி பழனிசாமி அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், பாஜகவுடனான கூட்டணி சிறுபான்மையின வாக்குகளை திமுக பக்கம் முழுமையாகத் திருப்பியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திமுகவின் 'வெற்றி சூத்திரம்' என்ன?

அரசுக்குச் சாதகமான அம்சங்களாகக் கருத்துக்கணிப்புகள் முன்வைப்பவை இவைதான்:

மகளிர் வாக்குகள்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து பயணம் மற்றும் காலை உணவுத் திட்டம் ஆகியவை கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்களிடையே திமுகவிற்குப் பெரும் செல்வாக்கைத் தேடித்தந்துள்ளன.

சமூகக் கட்டமைப்பு: முதலியார், நாயுடு மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் பரவலாக திமுக கூட்டணிக்கே ஆதரவு தெரிவிப்பதாக போல் ட்ராக்கர் கூறுகிறது.

முதிர்ச்சியான தலைமை: எடப்பாடி மற்றும் விஜய்யை விட ஸ்டாலின் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவராக மக்களால் பார்க்கப்படுகிறார்.

மற்ற கட்சிகளின் கதி?

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) 4.9% முதல் 5.1% வரை வாக்குகளைப் பெறக்கூடும் என்றும், அதிகபட்சமாக 2 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மற்ற சிறிய கட்சிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.

தமிழக அரசியல் களம் இப்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கருத்துக்கணிப்புகள் நிஜமாகுமா அல்லது கடைசி நேர 'அண்டர் கரண்ட்' மாற்றத்தை ஏற்படுத்துமா? ஏப்ரல் 23 விடை சொல்லும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+