74 ஆண்டு கால சட்டசபை தேர்தல் வரலாற்றில்! வாக்கு சதவீதத்தில் தமிழகம் பெரும் சாதனை!
சென்னை: 74 ஆண்டு கால சட்டசபை தேர்தல் வரலாற்றில் தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த வாக்கு சதவீதத்தை பார்க்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மார்ச் 15 அன்று சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஏப்ரல் 9 அன்று கேரளா, அசாம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 23) தமிழ்நாடு (ஒரே கட்டம்) மற்றும் மேற்கு வங்காளத்தின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 29 அன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறும்.
தேர்தல் நிறைவடைந்த கேரளா (140 தொகுதிகள்), அசாம் (126 தொகுதிகள்), புதுச்சேரி (30 தொகுதிகள்) ஆகிய இடங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் பதிவாகின. கடந்த 2021 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், கேரளாவில் 74.57%ல் இருந்து 84.42% ஆகவும், அசாம் 82.04%ல் இருந்து 84.42% ஆகவும், புதுச்சேரியில் 81.88%ல் இருந்து 91.23% ஆகவும் வாக்குப்பதிவு உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பதிவான 85 சதவீத வாக்குகள், 74 ஆண்டு கால சட்டசபை தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையை எட்டியுள்ளன. மேலும், மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிக வாக்குப்பதிவு பொதுவாக ஆளுங்கட்சிக்கு அதிருப்தி அல்லது ஆதரவைக் குறிப்பினும், சமீபத்திய 'வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி' (எஸ்.ஐ.ஆர்.) இம்முறை அதிக வாக்குப் பதிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதில், காலமானோர், இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டு, லட்சக்கணக்கான தகுதியற்ற வாக்காளர் பெயர்கள் மாநிலம் முழுவதும் அகற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பு 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இதன்மூலம் 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை வரலாற்றின் 16 தேர்தல்களில், 2011ஆம் ஆண்டு அதிகபட்சமாக 78.2% வாக்குகளும், 1957ஆம் ஆண்டு குறைந்தபட்சமாக 46.84% வாக்குகளும் பதிவாகின. தற்போதைய 85% வாக்குப்பதிவு புதிய வரலாற்றுச் சாதனையாகும். எஸ்.ஐ.ஆர். பணிகளுடன், முதல் தலைமுறை வாக்காளர்களின் ஆர்வமும் இந்த உயர்வுக்குக் காரணங்களாகும்.
தமிழகத்தில் இதுவரை நடந்த 17 சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதத்தை பார்க்கலாம்.
1952- 56.41%
1957- 46.84%
1962- 70.65%
1967- 76.57%
1971- 71.82%
1977- 61.58%
1980- 70.74%
1984- 73.47%
1989- 69.69%
1991- 63.08%
1996- 66.95%
2001- 59.07%
2006- 70.82%
2011- 78.02%
2016- 74.81%
2021- 73.63%
2026- 85.00%
-
தமிழ்நாட்டின் கஜானா காலியா? நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications