மைனாரிட்டி திமுக டூ தொடர்ந்து வென்ற அதிமுக.. தமிழகத்தில் கடைசி 5 தேர்தல்களில் என்ன நடந்தது? டேட்டா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2001 முதல் 2021ம் ஆண்டு வரை நடந்த 5 சட்டசபை தேர்தல்களில் அதிமுக - திமுக கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்பது பற்றி இங்கு சுருக்கமாக பார்க்கலாம். இந்த தேர்தல்களில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது, மைனாரிட்டியாக திமுக ஆட்சி செய்தது, அதிமுக 2 முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்தது உள்ளிட்ட வித்தியாசமான சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் இன்று மாலையில் 4 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிக்க உள்ளார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் தனித்து ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நடைபெற உள்ளது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தவெக கட்சி என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி என்பது இல்லை. திமுக, அதிமுக கட்சிகள் தான் மாற்றி மாற்றி ஆட்சியை பிடித்து வைத்துள்ளன. கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டாலும் கூட ஆட்சியில் இருகட்சிகளும் பங்கு கொடுத்தது. இல்லை.
இந்த முறை காங்கிரஸ் கட்சி திமுகவிடமும், பாஜக அதிமுகவிடமும் கூட்டணி ஆட்சியை எதிர்பார்க்கிறது. இருகட்சிகளும் மறுத்துவிட்டன. இருப்பினும் தொங்கு சட்டசபை அமைந்தால் இந்த முறை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் கடந்த 5 சட்டசபை தேர்தல்களில் என்ன நடந்தது? எந்தெந்த கூட்டணி எவ்வளவு இடங்களில் வெற்றி பெற்றது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
2021 சட்டசபை தேர்தல்
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி (மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி)159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் திமுக 133, காங்கிரஸ் 18, விடுதலை சிறுத்தைகள் 4 , இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 உள்பட சிறிய கட்சிகள் வெற்றி பெற்றன.
இதன் மூலம் 2021ல் 10 ஆண்டுகளுக்கு பிறகு முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் திமுக மட்டும் தனித்து 133 இடங்களை வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 66, பாமக 5, பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2016 சட்டசபை தேர்தல்
2016ல் தமிழக தேர்தல் வரலாற்றில் 1984க்கு பிறகு ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற்ற சாதனையை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படைத்தது. அதிமுக பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காத நிலையிலும் தனது இரட்டை இலை சின்னத்தில் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை களமிறக்கி அமோக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 134 இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்தது.
திமுக கூட்டணி 98 இடங்களில் வாகை சூடியது. திமுக கூட்டணியில் திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி என வெற்றி பெற்றது. திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்டது.
2011 சட்டசபை தேர்தல்
2011ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் இடதுசாரிகள் இடம்பெற்றன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக மட்டும் தனியாக 150 இடங்களை வென்றது. மாறாக அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக 150, தேமுதிக 29, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10, இந்திய கம்யூனிஸ்ட் 9, மனிதநேய மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, இன்னொரு கட்சி ஒன்று என்று அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
முதல் முறையாக விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். திமுக கூட்டணி 31 தொகுதிகளில் மட்டுமே வென்றது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட திமுகவுக்கு கிடைக்கவில்லை. திமுக கூட்டணியில் திமுக 23, காங்கிரஸ் 5, பாமக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
2006 சட்டசபை தேர்தல்
2006ல் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக 96 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 34, பாமக 18, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 9, இந்திய கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த கட்சிகளின் ஆதரவில் திமுக ஆட்சியை நிறைவு செய்தது.
அதேவேளையில் அதிமுக கூட்டணி 69 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் அதிமுக: 61, மதிமுக 6, விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றது. தனித்து களமிறங்கிய தேமுதிகவில் விஜயகாந்த் வெற்றி பெற்றிருந்தார்.
2001 சட்டசபை தேர்தல்
2001ல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இந்த கூட்டணி 196 தொகுதிகளை கைப்பற்றியது. அதிமுக மட்டும் தனியாக 132 இடங்களை வென்றது. கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் 23, பாமக 20, காங்கிரஸ் 7, இந்திய கம்யூனிஸ்ட் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் 3 இடங்களில் வென்றது.
மாறாக திமுக கூட்டணி வெறும் 37 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தது. இதில் திமுக 31 தொகுதிகளிலும் பாஜக 4 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி
















Click it and Unblock the Notifications