2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இதுவரை தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிடாதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த முறை அறிவிப்புகள் தாமதமாகி வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணை பிப்ரவரி 26, 2021 அன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 6, 2021 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அட்டவணை வெளியான சில நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி பேச்சுவார்த்தைகளை வேகப்படுத்தி, மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள்ளேயே பெரும்பாலான முக்கிய முடிவுகளை எடுத்துவிட்டன.
அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை தற்போது 2026 தேர்தல் சூழலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, வேறுபாடு தெளிவாக தெரிகிறது. 2021 தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக, மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலேயே தனது கூட்டணியை பெரும்பாலும் முடித்துவிட்டது.

மார்ச் 7, 2021 அன்று காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடனான ஒப்பந்தங்களும் மார்ச் 1 முதல் 8ஆம் தேதிக்குள் ஒன்றன் பின் ஒன்றாக இறுதி செய்யப்பட்டன. அதாவது, மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதிகளுக்குள் திமுக கூட்டணி முழுமை பெற்றுவிட்டது.
கூட்டணி உறுதியானவுடன், திமுக தொகுதி பங்கீடு விவரங்களையும் அதே காலகட்டத்தில் வெளியிடத் தொடங்கியது. மார்ச் 7 முதல் 9ஆம் தேதிக்குள் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது பற்றிய விவரங்கள் தனித் தனியாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் தேர்தல் பணிகளில் திமுக முன்னணியில் இருப்பதை அந்த நேரத்திலேயே பதிவு செய்திருந்தது.
இதற்குப் பிறகு மிக முக்கியமான கட்டமான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மார்ச் 12, 2021 அன்று திமுக தனது 173 வேட்பாளர்கள் கொண்ட முழுமையான பட்டியலை வெளியிட்டது. இதில் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அதாவது, வாக்குப்பதிவுக்கு சுமார் 25 நாட்களுக்கு முன்பே திமுக தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டு இருந்தது.
வேட்பாளர் பட்டியல் வெளியான அடுத்த நாளே திமுக தனது தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது. மார்ச் 13, 2021 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தேர்தல் அறிக்கையை முக ஸ்டாலின் வெளியிட்டார். மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு, எல்பிஜி மானியம், பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் போன்ற முக்கிய வாக்குறுதிகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு, கூட்டணி முதல் தேர்தல் அறிக்கை வரை அனைத்தும் மார்ச் மாதத்தின் முதல் பாதிக்குள் திமுக முடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும் திமுகவிற்கு இணையாகவே தனது தேர்தல் பணிகளை விரைவாக முன்னெடுத்தது. மார்ச் 5, 2021 அன்று பாஜக உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை அதிமுக கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் பாமக, தமாக உள்ளிட்ட பிற கூட்டணி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தன. மார்ச் 5 முதல் 9ஆம் தேதிக்குள் அதிமுக கூட்டணியும் முழுமையான வடிவத்தை பெற்றுவிட்டது.
வேட்பாளர் பட்டியல் வெளியீட்டிலும் அதிமுக வேகமாக செயல்பட்டது. மார்ச் 5, 2021 அன்று முதல் கட்டமாக 6 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதன்பிறகு மார்ச் 10, 2021 அன்று 171 வேட்பாளர்கள் கொண்ட முழுமையான பட்டியலை வெளியிட்டது. அதாவது, வாக்குப்பதிவுக்கு கிட்டத்தட்ட 27 நாட்களுக்கு முன்பே அதிமுக தனது முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையையும் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே வெளியிட்டது. மார்ச் 14, 2021 அன்று அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் மூலம் கூட்டணி, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகிய அனைத்தையும் மார்ச் மாதத்தின் முதல் பாதிக்குள் அதிமுக முடித்துவிட்டது.
இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள 2026 தேர்தலை பார்க்கும்போது, தேர்தல் பணிகளில் சுணக்கம் இருப்பது தெளிவாக தெரிகிறது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் இதுவரை முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி இறுதி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை போன்றவற்றை முழுமையாக வெளியிடவில்லை.
கடந்த 2021 தேர்தலில் இதே காலகட்டத்துக்குள் பெரும்பாலான பணிகள் முடிவடைந்திருந்த நிலையில், இந்த முறை அறிவிப்புகள் இன்னும் வெளியாகாதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. எனினும், 2021 தேர்தலின் போது, பொதுவாக வாக்குப்பதிவுக்கு முன்பான 20 முதல் 25 நாட்களுக்குள் இந்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் நடைமுறை இருந்தது.
அதே போன்று இந்த முறை மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் கூட்டணி, வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகள் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர். கடந்த முறை ஆட்சியை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என திமுக மிகத் தீவிரமாக செயல்பட்டது. அதனால் கூட்டணி கட்சிகள் உடனான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை ஆகியவற்றில் முன்னணியில் இருந்தது.
ஆனால் இந்த முறை திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட சில பிரச்சனைகளை கிளப்பியதால் தொகுதி பங்கீடு இன்னும் முடியாமல் உள்ளது. இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு வேட்பாளர் பட்டியல் என பல பிரச்சனைகள் இருக்கிறது. இதனால் 2026 தேர்தலில் வெறும் 15 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்திற்காக பயன்படுத்த வேண்டிய நிலை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஏற்பட்டுள்ளது.
-
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
Srirangam: அந்த செவுரு எத்தனை பேர பலி வாங்க போகுதோ? ஜெ. அரசியல் வாழ்வை காலியாக்கிய ‘ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்’ -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்! -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்?














Click it and Unblock the Notifications