Stars: பிரேமலதா எதிர்பார்த்ததுதான்! ஆனால் சவுமியா, தமிழிசை ஆச்சரியம் தராங்களே! மின்னம்பலம் சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் ஸ்டார் தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை பார்க்கலாம். அதிலும் முக்கியமாக சவுமியா அன்புமணி, நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோரின் வெற்றி வாய்ப்பு என்ன என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரும் மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் திமுக கூட்டணியே ஆட்சியை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

tamil nadu assembly election 2026

இந்த நிலையில் மின்னம்பலம் செய்தி நிறுவனம் மண்டல வாரியாக 234 தொகுதிகளுக்கும் கருத்துக் கணிப்புகளை நடத்தியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 200 பேர் வீதம் மொத்தம் 46,800 பேரிடம் கருத்துக் கருப்பு நடத்தியது. அதில் நட்சத்திர தொகுதிகளில் உள்ள வேட்பாளர்களின் நிலவரத்தை பார்க்கலாம்.

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடும் நிலையில் தேமுதிகவுக்கு 39 சதவீத வாக்குகளும் பாமகவுக்கு 35 சதவீத வாக்குகளும் தவெகவுக்கு 18 சதவீதமும் நாதகவுக்கு 5 சதவீத வாக்குகளும் பெறுவார் என மின்னம்பலம் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

அது போல் விருதுநகர் சட்டசபை தொகுதியில் விஜயபிரபாகர் போட்டியிடும் நிலையில் அவர் 39 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக கூட்டணி 35 சதவீத வாக்குகளையும் தவெக 18 சதவீதம், நாதக 5 சதவீதம் வாக்குகளையும் பெறும் என கணிக்கபப்டடுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை 39 சதவீத வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். அதிமுக 35%, தவெக 19%, நாதக 7% வாக்குகளை பெறுகிறது.

மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன், 30% வாக்குகளுடன் திமுக வேட்பாளர் 29 சதவீதமும், தவெக 29 சதவீதமும் நாதக 5 சதவீதமும் வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் , 34 % வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் 36 சதவீதம் வாக்குகளை பெறுமாம். அது போல் தவெக 24 சதவீதமும் நாதக 6 சதவீதமும் பெறும் என்கிறார்கள்.

தருமபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி 41 சதவீத வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். அது போல் திமுக கூட்டணி 38 சதவீதமும் தவெக 15 சதவீதமும் நாதக 4 சதவீதமும் பெறுவார்கள் என்கிறது கணிப்பு.

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான் இந்த தொகுதியில் 26 சதவீத வாக்குகளை பெறுவாராம். திமுக கூட்டணி 28%, அதிமுக கூட்டணி 19 சதவீதமும் தவெக 27 சதவீதமும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கருத்துக் கணிப்புகளின் படி பெரும்பாலான வேட்பாளர்களுக்கிடையே நெக் டூ நெக் போட்டி நிலவுகிறது. எனவே யார் வெல்வார்கள் என்பதை வரும் மே 4 ஆம் தேதி பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+