Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக கூட்டணி பங்கீட்டு பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அதிமுக - திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன? என்பதை கடந்த 2021 ம் சட்டசபை தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

தமிழகத்தில் 2026ம் ஆண்டு்க்கான சட்டசபை தேர்தல் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

tamil-nadu-assembly-election-how-alliances-churn-of-2021-and-2026-details-here

இந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட உள்ளது. இதனால் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 2021 சட்டசபை தேர்தல் மற்றும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் விவரங்களை இங்கு பார்க்கலாம்.

2021 திமுக கூட்டணி

திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டது. கூட்டணிக்கு திமுக தலைமை வகித்தது. இந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். அதன்படி 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கதார் மொஹிதினின் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இருந்தது.

அதேபோல் வைகோவின் மதிமுக, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, கதிரவனின் அனைத்திந்திர பார்வர்டு பிளாக், அதியமானின் ஆதி தமிழர் பேரவை, முருகவல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியில் இருந்தது.

இந்த கூட்டணி மொத்தமாக 158 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 133 இடங்களில் வென்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 45.38 சதவீத ஓட்டுகள் கிடைத்தது.

2026 திமுக கூட்டணி

2026 சட்டசபை தேர்தலில் திமுக திராவிட மாடல் 2.0 என்ற முழக்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியிலும் கடந்த முறையே போல் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, ஐயுஎம்எல், கொமதேக, தவாக, மனிதநேய மக்கள் கட்சி, ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் தொடர்கிறது.

இதுதவிர
புதிய வரவாக விஜயகாந்தின் தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, முகமது முபாரக்கின் எஸ்டிபிஐ, ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகம், தனியரசுவின் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, பொன் குமாரின் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன.

ஆளும் கட்சியாக இருப்பது மற்றும் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பது இந்த தேர்தலில் திமுகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் 5 ஆண்டு ஆட்சி நிறைவு பெற்றதால் அதிருப்தி அலை மக்களிடம் இருக்கலாம். இது நெகட்டிவாக பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணி

2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், சேதுராமனின் அனைந்திந்திய மூவேந்தர் முன்னணி கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், என்ஆர் தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்டவை இருந்தன.

2026 தேர்தலிலும் இந்த கூட்டணி அப்படியே நீடிக்கிறது. ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம் பிரிந்து சென்றுள்ளது. அதேவேளையில் புதிய வரவாக டிடிவி தினகரனின் அமமுக, கதிரவனின் அனைத்திந்திய பார்வர்ட் பிளாக், பாரிவேந்தரின் ஐஜேகே, பரதனின் சிங்க தமிழர் முன்னேற்ற கழகம், ஷேக் தாவூத்தின் தமிழ் மநாில முஸ்லிம் லீக் வெட்டவளம் மணிகன்டனின் உழவர் உழைப்பாளர் கட்சி, திருமாறனின் தென்னிந்திய பார்வர்ட் பிளாக், ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. இந்த கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 66 இடங்களை கைப்பற்றியது. இந்த கூட்டணிக்கு 39.71 சதவீத ஓட்டு கிடைத்தது.

சீமான் - விஜய்

இந்த கூட்டணி தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த 2021ல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியது. மொத்தம் 6.58 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. அதேபோல் இந்த முறையும் தனித்தே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. விஜய் புதிதாக தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். 2021 சட்டசபை தேர்தலின்போது அவர் கட்சி தொடங்கவில்லை. இதனால் அப்போது போட்டியிடவில்லை. இந்த சட்டசபை தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்துக்கு முதல் தேர்தலாக அமைகிறது. அதில் தனித்து களமிறங்க உள்ளது.

இவர்கள் தவிர பாமகவில் நிறுவனர் ராமதாஸ் அணி, சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்பது முககியமானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+