மகிழ்ச்சி... மன நிறைவு...மு.க ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: புதிய அரசை அமைக்கவிருக்கும் தி மு கழகத்திற்கும், அதன் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. காலை முதலே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். ஆளும் அதிமுக 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆளும் கட்சியாக அரியணையில் அமரப்போகிறது. முதல்வராக பதவியேற்கப் போகும் மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கின்றன.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 2, 2021
திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
3-ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
புதிய அரசை அமைக்கவிருக்கும் தி மு கழகத்திற்கும், அதன் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதிய அரசை அமைக்கவிருக்கும் தி மு கழகத்திற்கும், அதன் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
— P. Chidambaram (@PChidambaram_IN) May 2, 2021
பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சியில் அமரும் திமுகவிற்கும், முதல்வராக பதவியேற்க உள்ள மு.க ஸ்டாலினுக்கும் அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் பலரும் நேரிலும் ட்விட்டர் மூலமும் வாழ்த்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications