விஜய் தான் ‘டாப்’..ஸ்ட்ரைக்ரேட்டிலும் திமுக – அதிமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக! கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னம் மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் திமுகவின் உதயசூரியன் 176 தொகுதிகளிலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 173 தொகுதிகளிலும் களமிறங்கியது. இதில் விஜய்யின் தவெகவின் வெற்றிக்கான ஸ்ட்ரைக்ரேட் இருகட்சிகளை விட அதிகமாக உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தவெக 108 தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. திமுக கூட்டணி 72 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வாகை சூடி உள்ளது.

இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் தேர்தல் முடிவுகள் தொடர்பான பல்வேறு முக்கிய டேட்டாக்கள் வெளியாகி வருகின்றன.

AIADMK

ஸ்ட்ரைக்ரேட் என்பது என்ன?

அந்த வகையில் தமிழகத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளின் ஸ்ட்ரைக்ரேட் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. ஸ்ட்ரைக்ரேட் என்பது ஒரு கட்சி எவ்வளவு தொகுதியில் போட்டியிட்டு எத்தனை தொகுதியில் வெற்றி பெற்றது என்பதன் அடிப்படையில் அமையும்.

உதாரணமாக ஒரு கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றால் 100 சதவீதம் ஸ்ட்ரைக்ரேட் என சொல்வார்கள். அதேவேளையில் 100 தொகுதிகளில் போட்டியிட்டு 50ல் வெற்றி பெற்றால் 50 சதவீத ஸ்ட்ரைக்ரேட் என்பார்கள்.

விஜய்யின் தவெக முதலிடம்

இந்த ஸ்ட்ரைக்ரேட்டில் விஜய்யின் தவெக முதலிடம் பிடித்துள்ளது. தவெக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தது. இதில் எடப்பாடி தொகுதியில் வேட்பாளரின் மனு தள்ளுபடியானது. இதனால் மொத்தம் 233 தொகுதிகளில் தவெக போட்டியிட்டது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த கட்சியின் வெற்றி சதவீதம் 45.9 சதவீதமாக உள்ளது. அதாவது ஸ்ட்ரைக் ரேட் 45.9 சதவீதமாகும்.

2வது இடத்தில் திமுக

திமுக தனித்து 163 தொகுதிகளிலும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் 13 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கியவர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் திமுக வேட்பாளராக தான் கருதப்படுவார்கள். அதன்படி திமுக மொத்தம் 176 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் ஸ்ட்ரைக் 34.1 சதவீதமாகும்.

பின்தங்கிய அதிமுக - காங்கிரஸ்

அதேபோல் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மொத்தம் 172 தொகுதிகளில் களமிறங்கியது. இதில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிமுகவின் ஸ்ட்ரைக்ரேட் 27.3 சதவீதமாகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் 'கை' சின்னத்தில் போட்டியிட்டது. 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அதன் ஸ்ட்ரைக்ரேட் 17.9 சதவீதமாகும். சீமானின் நாம் தமிழர் கட்சி மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் களமிறங்கியது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் நாம் தமிழரின் ஸ்ட்ரைக்ரேட் பூஜ்ஜியமாகும்.

பிற சுவாரசிய தகவல்கள்

இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வென்றார். இவர் 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருப்பத்தூர் தொகுதியின் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வென்றார். இவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் பெரியகருப்பனை வீழ்த்தினார்.

அதேபோல் குறைந்த வயது எம்எல்ஏ என்றால் அது தவெகவின் கமலி ஆவார். இவர் அவிநாசி தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிக வயது எம்எல்ஏ பாஜகவின் போஜராஜன் ஆவார். இவர் அதிமுக கூட்டணியில் பாஜகவில் ஊட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பாஜகவில் வென்ற ஒரேயொரு எம்எல்ஏ இவர் மட்டும் தான்.

அதேபோல் பணக்கார எம்எல்ஏவாக லீமா ரோஸ் இவர் லால்குடி தொகுதியில் அதிமுகவில் போட்டியிட்டு வென்றார். இவரது சொத்து மதிப்பு ரூ.5,863 கோடியாகும். இவர் தவெக ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் ஆவார். அதோடு லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+