ரஜினி, கமல், விஜய், அஜீத் எந்த நடிகர் எந்த நடிகர் எங்கு ஓட்டு போட வருவாங்க தெரியுமா

ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிக்க உள்ளார். நடிகர் கமல்ஹாசன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் வாக்களிக்க உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் செவ்வாய்கிழமை காலை 7 மணியளவில் சென்னை உயர் நிலைப்பள்ளி, 109, எல்டாம்ஸ் சாலை, திருவள்ளுவர் சாலை தேனாம்பேட்டையில் வாக்களிக்க உள்ளதாக மநீம ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிக்க உள்ளார்.

தமிழகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளன.
திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் வாக்களித்த பின்னர் பலர் தங்கள் விரலில் வாக்களித்ததற்கான மை வைக்கப்பட்டுள்ள விரலுடன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

Tamil Nadu assembly Elections 2021: Kollywood celebs who cast their vote and which Polling booth

நடிகர்கள் சிலர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக இந்த சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். காலை 7 மணிக்கு தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் வாக்களிக்கப் போகிறார். அதன் பிறகு அவர் போட்டியிடும் கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்குச் சென்று அங்கு உள்ள அனைத்து வார்டுகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக பார்வையிடுவார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பிரபல நடிகர் நடிகைகள் சென்னையில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப்போகின்றனர் என தெரிந்து கொள்வோம்.

  • நடிகர் ரஜினிகாந்த்- ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி
  • நடிகர் கமல் மற்றும் குடும்பத்தினர் - ஆழ்வார்பேட்டை
  • நடிகர் விஜய் - நீலாங்கரை
  • நடிகர் அஜித் மற்றும் ஷாலினி- திருவான்மியூர்
  • நடிகர் விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர்- சாலிகிராமம்
  • நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்திக், ஜோதிகா - ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர்
  • நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி - எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை
  • நடிகர் விஜய் சேதுபதி -கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி
  • நடிகை குஷ்பு - பட்டினம்பாக்கம்
  • நடிகர் தனுஷ் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
  • நடிகர் சித்தார்த் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
  • இசையமைப்பாளர் அனிருத்- டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
  • நடிகை திரிஷா-டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
  • நடிகர் அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் -டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை
  • நடிகர் சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர்- நுங்கம்பாக்கம்
  • நடிகர் ரமேஷ் கண்ணா - சாலிகிராமம்
  • நடிகர் ஸ்ரீகாந்த்- காவேரி பள்ளி சாலிகிராமம்
  • நடிகர் ரோபோ- ஷங்கர் காவேரி பள்ளி சாலிகிராமம்
  • நடிகர் வடிவேலு- சாலிகிராமம்
  • நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர்
  • நடிகர் டி.ராஜேந்தர் மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர்
  • நடிகர் விஜய் ஆண்டனி - சாலிகிராமம்
  • நடிகர் சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்
  • இசையமைப்பாளர் இளையராஜா - இந்து பிரச்சார சபா, தியாகராய நகர்
  • நடிகை விந்தியா- HRNC, ஆயிரம் விளக்கு
  • நடிகர் செந்தில் - சாலிகிராமம்
  • நடிகர் கார்த்திக் மற்றும் குடும்பத்தினர்- தியாகராய நகர்
  • நடிகர் ஆனந்தராஜ்- நுங்கம்பாக்கம்
  • நடிகர் கவுண்டமணி- சாலிகிராமம்
  • நடிகர் மன்சூர்- அலிகான் நுங்கம்பாக்கம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+