2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்!
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மின்னல் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. "யாருக்கு மகுடம்?" என்ற கேள்விக்கு விடை தேடி, அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வரும் வேளையில், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலைத் துல்லியமாகக் கணித்த ANS எனப்படும் அக்னி நியூஸ் சர்வே நிறுவனம், தனது தற்போதைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தைப் அதிர வைத்துள்ளது.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 12 வரையிலான காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான ஆய்வின் முடிவுகள் இது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்கு சதவிகிதம்: யாருக்கு எவ்வளவு?
இந்த சர்வே முடிவுகளின்படி, ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.
திமுக கூட்டணி: 44.9% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
அதிமுக + NDA கூட்டணி: 38.5%வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக): 9.7% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
நாம் தமிழர் கட்சி (நாதக): 4.8% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
மற்றவை: 2.1% பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
தொகுதிகள் கணக்கு: திமுகவின் 'கிளீன் ஸ்வீப்'?
வாக்கு சதவிகிதத்தை விடவும், இடங்களைக் கைப்பற்றுவதில் திமுக கூட்டணி அசுர பலத்துடன் முன்னிலை வகிக்கிறது.
திமுக கூட்டணி: தற்போதைய நிலவரப்படி 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கூட்டணியாக ஆட்சியைத் தக்கவைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது திமுக கூட்டணி 180+ இடங்களை வெல்லும். திமுக அதில் தனிப்பெரும்பான்மை பெரும். அதாவது 234 தொகுதிகளில் திமுக குறைந்தது 118 இடங்களை வென்றால் தனியாக ஆட்சி அமைக்கலாம். திமுக அதில் தனிப்பெரும்பான்மை பெரும் என்று இந்த கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதிமுக + NDA கூட்டணி: பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தாலும், இந்தக் கூட்டணி 54 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்கிறது ANS சர்வே.
முதலமைச்சர் ரேஸ்: முந்துவது யார்?
"அடுத்த முதலமைச்சர் யார்?" என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதிலில், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கே மீண்டும் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துள்ளது. அவரது நிர்வாகத் திறன் மற்றும் நலத்திட்டங்கள் அவருக்குத் தனிப்பட்ட செல்வாக்கை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கவனிக்க வேண்டிய திருப்பங்கள்!
இந்தக் கருத்துக் கணிப்பில் ஆச்சரியமான விஷயம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெற்றுள்ள 9.7% வாக்குகள். முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்கத்தை நெருங்கும் இந்த சதவிகிதம், வரும் நாட்களில் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சீமானின் நாம் தமிழர் கட்சி தனது 4.8% வாக்குகளைத் தக்கவைத்துள்ளது.
ANS நிறுவனத்தின் கணிப்புப்படி, தமிழகத்தில் மீண்டும் 'உதயசூரியன்' உதிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும், தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்க வேண்டியிருப்பதால், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!












Click it and Unblock the Notifications