தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் வெல்லும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ANS எனப்படும் அக்னி நியூஸ் சர்வே நிறுவனம் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி கடுமையான பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலைத் துல்லியமாகக் கணித்த ANS நிறுவனம், தனது தற்போதைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தைப் அதிர வைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கூட்டணியாக ஆட்சியைத் தக்கவைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது திமுக கூட்டணி 180+ இடங்களை வெல்லும்.

திமுக அதில் தனிப்பெரும்பான்மை பெறும். அதாவது 234 தொகுதிகளில் திமுக குறைந்தது 118 இடங்களை வென்றால் தனியாக ஆட்சி அமைக்கலாம். திமுக அதில் தனிப்பெரும்பான்மை பெரும் என்று இந்த கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக + NDA கூட்டணி: பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தாலும், இந்தக் கூட்டணி 54 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என்கிறது ANS சர்வே.
நாம் தமிழருக்கு பின்னடைவு
இந்தக் கருத்துக் கணிப்பில் ஆச்சரியமான விஷயம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெற்றுள்ள 9.7% வாக்குகள். முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்கத்தை நெருங்கும் இந்த சதவிகிதம், வரும் நாட்களில் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சீமானின் நாம் தமிழர் கட்சி தனது 4.8% வாக்குகளை பெறும். அதாவது கடந்த தேர்தலை விட 2% குறைவான வாக்குகளை நாம் தமிழர் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
வாக்கு சதவிகிதம்: யாருக்கு எவ்வளவு?
இந்த சர்வே முடிவுகளின்படி, ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.
திமுக கூட்டணி: 44.9% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
அதிமுக + NDA கூட்டணி: 38.5%வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக): 9.7% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
நாம் தமிழர் கட்சி (நாதக): 4.8% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
மற்றவை: 2.1% பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 12 வரையிலான காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான ஆய்வின் முடிவுகள் இது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
2021ல் பெற்ற வாக்குகள் எவ்வளவு?
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு சதவீத விவரங்கள் (புள்ளி விவரங்கள்) இதோ:
திமுக (DMK): 37.70%
அதிமுக (AIADMK): 33.29%
நாம் தமிழர் கட்சி (NTK): 6.58% ( இந்த முறை 4.8 சதவிகிதமாக இது குறையும்)
காங்கிரஸ் (INC): 4.27%
பாமக (PMK): 3.80%
பாஜக (BJP): 2.62%
மக்கள் நீதி மய்யம் (MNM): 2.62%
அமமுக (AMMK): 2.35%
இந்திய கம்யூனிஸ்ட் (CPI): 1.09%
விசிக (VCK): 0.99%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M): 0.85%
நோட்டா (NOTA): 0.75% வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications