தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை.. தலைவர்கள் வாக்களிக்கும் இடங்கள்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வாக்காளர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்று நடைபெறும் தேர்தலில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அனைவரும் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களிக்க உள்ளனர். அரசியல் தலைவர்கள் வாக்களிக்க உள்ள இடங்கள் பற்றிய விவரங்களை பார்க்காலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜனநாயக கடமை ஆற்ற தமிழக மக்கள் தயாராகி வருகிறார்கள். அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரலங்கள் வரை இன்று தங்கள் ஜனநாயக கடமையை மக்களோடு மக்களாக நின்று ஆற்ற உள்ளனர்.

வாக்களிக்க போகும் இடங்கள்
தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாக்களிக்க போகும் இடங்கள் எவை என்ற விவரங்களை பார்க்கலாம்.
முதல்வர் மு.க ஸ்டாலின் - காலை 8 மணி, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி தேனாம்பேட்டை.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - காலை 8 மணி, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி தேனாம்பேட்டை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - காலை 7 மணி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிலுவம்பாளையம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - காலை 7 மணி, சென்னை நடுநிலைப்பள்ளி, ஸ்ரீகபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை.
த.வெ.க. தலைவர் விஜய் - காலை 8 மணி, சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, நீலாங்கரை.
நயினார் நாகேந்திரன்:- காலை 7.30 மணி, பாளையங்கோட்டை, மகாராஜாநகரில் உள்ள பள்ளி.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை:- காலை 7 மணி, மாநகராட்சி பள்ளி, மணிமங்கலம்.
கி.வீரமணி - காலை 8 மணி, அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பான்சாவடி, காமராஜர் அவென்யூ 2-வது தெரு, அடையாறு.
மத்திய அமைச்சர் எல்.முருகன் - காலை 8 மணி, ஷாப் கேம்ஸ் வில்லேஜ், கோயம்பேடு.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ - காலை 7.30 மணி, அரசு மேல்நிலைப்பள்ளி, கலிங்கப்பட்டி.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் - காலை 8.30 மணி, சென்னை நடுநிலைப்பள்ளி, மூர்த்திங்கர் தெரு, வியாசர்பாடி, சென்னை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் - காலை 8 மணி, அரசு ஆரம்பப்பள்ளி, அங்கனூர், அரியலூர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் - காலை 9.30 மணி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆழ்வார்ப்பேட்டை.
அமமுக. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் - காலை 8 மணி, தாமோதரபுரம் அரசுப்பள்ளி, கற்பகம் அவென்யூ பகுதி, அடையாறு.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் - காலை 8 மணி, கர்நாடகா பள்ளி, அபிபுல்லா சாலை, தியாகராயநகர், சென்னை.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் - தேனி பெரிய குளம், செவன்த் டே பள்ளி வாக்குச்சாவடி - காலை 7.45 மணி
நடிகர் நடிகைகள்:
ரஜினிகாந்த்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்
அஜித்: சென்னை திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களிக்க உள்ளார்
சிவகார்த்திகேயேகன்: குட் ஷெப்பார்ட் பள்ளி, வளசரவாக்கம்
விஜய் சேதுபதி: கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார்
சரத்குமார்: நெல்லை நாடார் மேல் நிலைப்பள்ளி, கொட்டி வாக்கம் - சென்னை
ராதிகா: நெல்லை நாடார் மேல் நிலைப்பள்ளி, கொட்டி வாக்கம் - சென்னை












Click it and Unblock the Notifications