தமிழக சட்டசபை கூட்டம் 2ம் நாள் அமர்வு தொடங்கியது.. இன்று தாக்கலாகும் 7 முக்கிய மசோதா.. ஏன் முக்கியம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை இரண்டாவது நாள் கூட்டம் இன்று கூடியது. இன்றைய தினம் முக்கிய மசோதாக்களைக் கொண்டு வரத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபை இரண்டாவது நாளாக இன்று கூடுகிறது. இந்தச் சட்டசபை கூட்டத்தொடர் நாளை அக். 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் முதல் நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தில் கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் பெயர் கூட இல்லை என்று கூறி பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்த காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியான அதிமுக மற்று திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில் அதிமுகவினரும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே இன்று இரண்டாவது நாளாகத் தமிழக சட்டசபை கூடியது.. இதில் 2023 -2024 ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானியக் கோரிக்கை தாக்கல் செய்வார்கள் எனக் கூறப்படுகிறது. இன்றைய தினம் 7 மசோதாக்களைத் தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுவிற்கான மூலப்பொருளான ஸ்பிரிட் வரியை உயர்த்தும் சட்ட மதோசா, சீட்டு நிதி குறித்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் நிறைவேற உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அதிமுகவைப் பொறுத்தவரை நீண்ட காலம் சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான சிறப்பு மசோதாவைக் கொண்டு வர உள்ளனர். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் சிறுபான்மையினர் வாக்குகளை மீண்டும் தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக இறக்கியுள்ளதையே இது காட்டுகிறது.
இது தவிரப் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது, திமுக நிறைவுற்றதாகத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர். அதேபோல மகளிர் உரிமை தொகை திட்டம் பலருக்கும் கிடைக்காதது குறித்தும் கேள்வி எழுப்ப உள்ளனர். இவை தவிர எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications