"சீட்டில்" கெத்தாக உட்கார்ந்த ஓபிஎஸ்.. சபையை புறக்கணித்த எடப்பாடி.. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி

பரபரப்பான சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று 10 மணிக்கு கூடுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான சூழ்நிலைகளுக்கிடையே, தமிழக சட்டசபை கூட்டம் இன்று கூடியுள்ளது.. சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ்ஸுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வராமல் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடர் மே 10-ந்தேதி நிறைவடைந்தது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் 6 மாதங்களுக்குள், அதாவது நவம்பர் 10-ந்தேதிக்குள் கூட்டப்பட வேண்டும்.

இந்த நிலையில், இந்த மாதம் 3-வது வாரத்தில் சட்டசபையை கூட்ட திட்டமிடப்பட்டு, அநேகமாக17-ந்தேதி முதல் சட்டசபை கூட்டப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.

 இரங்கல்

இரங்கல்

அந்தவகையில், இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிற்கும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாத மறைவிற்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவு பற்றியும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது..

 விசாலம்

விசாலம்

பிறகு, சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. பின்னர், 11 மணியளவில் அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.. இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. அநேகமாக 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா பரவல் காலகட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அங்கு இடவசதி விசாலமாக இருந்ததால், இருக்கைகளுக்கு இடையே எம்எல்ஏக்கள் சென்று வருவதில் நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை..

 நெருக்கடி

நெருக்கடி

இப்போது, வழக்கம்போல, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அரங்கத்தில் சட்டசபை அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... மேலும், சட்டசபையில் நடைபெறும் சில நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்காக சில வசதிகளை செய்ய வேண்டியதிருந்ததால், எம்எல்ஏக்களின் இருக்கைகள் நெருக்கி போடப்பட்டன. இதனால் அவர்கள் சட்டசபையில் நடமாடுவதில் நெருக்கடி நிலவும் என்பதால் இதுபற்றி சட்டசபை செயலகத்தில் எம்எல்ஏக்கள் புகார் சொன்னார்கள்..

 இடையூறு

இடையூறு

அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரும் உத்தரவிட்டார். இதுபற்றி பொதுப்பணித்துறையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இறுதியில், எம்எல்ஏக்கள் உட்காரும் இருக்கைகளில் 'குஷன்' குறைந்த அளவுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் உட்காரும்போது இருக்கையின் முன்பகுதியில் கூடுதல் இடைவெளி கிடைக்கும் என்பதால் எம்எல்ஏக்கள் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படாது என்றும் கூறப்பட்டிருந்தது அமைச்சர்கள் தவிர எம்எல்ஏக்களுக்கு முன்புள்ள "மைக்"குகள், அசைக்க முடியாதபடி உறுதியாக பொருத்தப்பட்டுள்ளது.

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

இதனிடையே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதலானது, சட்டசபையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவில் இருவருமே ஒருவரை ஒருவர் கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டது மட்டுமல்லாமல் இது பற்றி சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பி இருந்தனர்.. எனவே, இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு சபாநாயகருடன் வாக்குவாதம் செய்து சட்டசபை புறக்கணிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியும் வந்தது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்தான் என்பதை சபாநாயகர் அப்பாவு உறுதி செய்துள்ளார்..

 ஆப்சென்ட்

ஆப்சென்ட்

சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறாதது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் உட்கார்ந்துள்ளார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி இன்றைய கூட்டத்துக்கு வரவில்லை.. அவரது தரப்பு எம்எல்ஏக்களும் சட்டசபை நிகழ்வில் இன்று பங்கேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+