Breaking News Live: மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்.. தமிழக சட்டசபையில் நிறைவேறியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகதாது உட்பட எந்த இடத்திலும் அணைகள் கட்ட கூடாது என்று தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் முன் மொழிந்துள்ளது.

தீர்மானத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் முன்மொழிந்தார். இதையடுத்து ஒரு மனதாக தீர்மானத்தை நிறைவேற்றித்தர அனைத்து கட்சிகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்புவிடுத்து உரையாற்றினார்.

இதன்பிறகு எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். மேலும் பல உறுப்பினர்களும் பேசிய பிறகு, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

Tamil Nadu assembly pass resolution over Mekadatu dam project - Live

Dec 06, 2018, 5:42 pm IST

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது
Dec 06, 2018, 5:42 pm IST

சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேட்டி

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை திமுகவும் ஆதரித்துள்ளது

தமிழக வாழ்வாதார பிரச்சினை என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஆதரவு-ஸ்டாலின்

Dec 06, 2018, 5:28 pm IST

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது- முதல்வர்

மத்திய அரசின் செயல்பாடு வருத்தத்தை தருகிறது- முதல்வர் உரை

Dec 06, 2018, 5:24 pm IST

மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

தமிழக சட்டசபையில் ஸ்டாலின் பேசினார்

தமிழகத்திற்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது - ஸ்டாலின்

காவிரி ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை - ஸ்டாலின்

Dec 06, 2018, 5:24 pm IST

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது - ஸ்டாலின்

முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டதன் உள்நோக்கம் என்ன? - ஸ்டாலின்

மாநிலத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது - ஸ்டாலின்

தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் - ஸ்டாலின்

Dec 06, 2018, 4:44 pm IST

தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் - முதல்வர்
Dec 06, 2018, 4:44 pm IST

தமிழக அரசின் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ் ஆதரவு
Dec 06, 2018, 4:44 pm IST

முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் பேச்சு

மேகதாதுவிற்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் வாசிக்கிறார்

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது - முதல்வர் பழனிச்சாமி

Dec 06, 2018, 4:44 pm IST

மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்

ஒட்டுமொத்த தமிழக மக்கள் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானம்-முதல்வர்

ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றித்தர எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை

Dec 06, 2018, 4:42 pm IST

மேகதாது - தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

காவிரி படுகையில் மேகதாது அல்லது எந்த இடத்திலும் அணை கட்டக் கூடாது

கர்நாடகம் அணை கட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்த மத்திய நீர் வள ஆணையத்துக்கு கண்டனம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+