4 நாள் விடுமுறைக்குப் பின் கூடிய தமிழக சட்டசபை! 3 முக்கிய துறைகளின் மானிய கோரிக்கை விவாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. இன்று முதல் துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. பட்ஜெட் விவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாத விவாதம் நடக்க இருக்கிறது. இன்று மட்டும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட 3 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் தொடங்கியது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதை அடுத்துக் கடந்த 5ஆம் தேதி 2026 2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ஐந்தாம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

Tamil Nadu Assembly tvk vijay

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து 7 முதல் 11ஆம் தேதி வரை சட்ட சபையில் விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டசபை

இதில் தமிழக வெற்றிக்கழகம், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதை அடுத்து 12-ஆம் தேதி வேளாண் மற்றும் பொது பட்ஜெட் குறித்து துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். பொது பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு நிதியமைச்சர் மரிய வில்சன், வேளாண் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் வினோத்தும் பதில் அளித்தனர்.

தமிழக பட்ஜெட்

இதை அடுத்து பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் நிறைவடைந்தன. பின்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டசபைக்கு கடந்த நான்கு நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

மானிய கோரிக்கை

முதலில் மக்கள் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்புத்துறை ஆகியவற்றின் மீதான மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.

கேஏ செங்கோட்டையன்

மருத்துவம் மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர் அருண்ராஜும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தொடர்பான கேள்விகளுக்கு கேஏ செங்கோட்டையனும் பதில் அளிக்கின்றனர். இது மட்டும் இன்றி விவாதத்தின் விரைவில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கான புதிய திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் அமைச்சர்கள் சார்பில் வெளியிடப்படுகிறது.

முதல்வர் விஜய்

தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதங்களில் அரசின் திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள், துறை வாரியான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறுகிறது. இடையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+