தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது! உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர் ரவி
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடப்பாண்டுக்கான சட்டசபை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் அவர் உரையை வாசிக்காமல் வெளியேறிவிட்டார். தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி அவர் வெளியேறினார். மேலும் ஆளுநர் உரையானது நேரலையாகவும் ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் நிலையில் இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆண்டுதோறும் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் சட்டசபைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்திருந்தார். அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அவரை சபாநாயகர் அப்பாவுவும், சட்டசபை செயலாளரும் புத்தகங்களையும் பூங்கொத்துகளையும் கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்திய நிலையில், சட்டசபையின் மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
தேசிய கீதம் இசைக்கப்படாதது மிகவும் வருத்தமளிப்பதாக கூறி ஆளுநர் அங்கிருந்து வெளியேறிவிட்டார். தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் உரை பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வரும் நிலையில், இன்று அவர் உரையை வாசிப்பாரா என்ற கேள்வி பரபரப்புடன் எழுந்துள்ளது. மாநில சட்டமன்றத்தின் மரபுப்படி, ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் காலை 9:30 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக, சுமார் 9:25 மணியளவில், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். அவருக்கு, பேண்ட் வாத்தியங்கள் முழங்க காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை முழுமையாக அளிக்கப்பட்டது.
சரியாக காலை 9:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை ஆற்றத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் உரை நிகழ்த்தி முடித்தவுடன், சட்டப்பேரவைத் தலைவர் சபாநாயகர் அப்பாவு, ஆளுநரின் உரையை தமிழில் முழுமையாக வாசிப்பார். இதுதான் மரபு. சபாநாயகர் வாசிப்புடன் முதல் நாள் கூட்டத்தொடர் நிறைவுக்கு வரும்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் உடனடியாக நடைபெறும். இந்தக் கூட்டத்தில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விரிவாக முடிவு செய்யப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications