சட்டசபை கூட்டம் ஏப்.21 வரை நடைபெறும்..ஆன்லைன் ரம்மி மசோதா..அனல் பறக்கும் விவாதங்கள்
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். ஏப்ரல் 20,21ஆம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் கவனிக்கும் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை அமைச்சர் கொண்டுவரும்போது, சட்டசபையில் நிறைவேற்றப்படும். எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தினமும் காலையில் 10 மணிக்கு தொடங்கி 2 மணி வரை கூட்டம் நடைபெறும். சில நாட்களில் மாலையிலும் கூட்டம் நடக்கும்.
காலை நேரத்தில் மட்டுமே கேள்வி நேரம் இடம்பெறும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார். இருக்கை விஷயத்தை அதிமுக தரப்பில் ஏற்றுக் கொண்டுள்ளனர். இருக்கை பற்றி அவர்கள் பேசவில்லை. கூட்டத்தொடரில் மக்கள் பிரச்சினை பற்றி அவர்கள் பேசுவார்கள் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் மானியக்கோரிக்கைகள் விவாதம்
சட்டப்பேரவையில் வரும் மார்ச் 23ஆம் தேதி, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்படுகிறது. அன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் நிலையில் அன்று காலை நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மாலை இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வைதுறை, போக்குவரத்து துறை. 30ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, 31ஆம் தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கு மீது விவாதம் நடக்கிறது.

நெடுஞ்சாலைத்துறை
ஏப்ரல் 1ஆம்தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் பொதுப்பணித்துறை, தகவல் தொழில் நுட்பவியல். 2ஆம் தேதி அரசு விடுமுறை. 3ஆம் தேதி பேரவை கூட்டம் இல்லை. 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை. 5ஆம் தேதி வேளாண்மைத்துறை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், 6ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மாலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்
7ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை, 8ஆம் தேதி அரசு விடுமுறை, 9ஆம்தேதி அரசு விடுமுறை, 10ஆம் தேதி காலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை, தமிழ் வளர்ச்சி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாலையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு. வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரபதிவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

ஏப்.11ல் உதயநிதி ஸ்டாலின்
11ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல், 12ஆம் தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, மாலையில் எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். 13ஆம் தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனம், மாலையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் கிராமத்தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள், 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அரசு விடுமுறை.

இந்து சமய அறநிலையத்துறை
15, 16 அரசு விடுமுறை, 17ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 18-ந்தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 19-ந்தேதி சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை, மாலையில் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றங்கள்.

முதல்வர் பேச்சு
20ஆம் தேதி காவல் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை, தீயணைப்புத்துறை 21ஆம் தேதி காவல், தீயணைப்புத்துறை மீதான விவாத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை மற்றும் அறிவிப்புகள், அரசினர் சட்ட மசோதாக்கள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றலும், ஏனைய அரசினர் அலுவல்கள். பேரவை காலையில் 10 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் கூடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications