BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா?
சென்னை: தமிழக பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது என தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையில் பியூஷ் கோயல் இதை வெளியிடுகிறார்.
என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்கள் கிடைத்துள்ளன. திருப்பரங்குன்றத்தை பாஜக கேட்ட நிலையில் அதை அதிமுகவே வைத்துக் கொண்டது. இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை காண்போம்.

மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கினார். இதையடுத்து ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பேர் அடங்கிய பட்டியல் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.
அவர் தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் பங்கேற்பர் என தெரிகிறது.
இந்த கூட்டம் நடந்து முடிந்த பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர்களின் பட்டியலை பியூஷ் கோயல் வெளியிடுகிறார். மேலும் தமிழக சட்டசபை தேர்தலுக்கா பாஜகவின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து உத்தேச பட்டியல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
மயிலாப்பூர்- தமிழிசை சவுந்திரராஜன்
தளி- அமர்பிரசாத் ரெட்டி
மொடக்குறிச்சி- கிருத்திகா சிவகுமார்
உதகை- போஜராஜன்
அவிநாசி- எல்.முருகன்
திருப்பூர் தெற்கு- ஏ.பி.முருகானந்தம்
கோவை வடக்கு- வானதி சீனிவாசன்
கந்தர்வகோட்டை- புரட்சி கவிதாசன்
புதுக்கோட்டை- ராமசந்திரன்
திருப்பத்தூர்- சோழன் சி.த.பழனிசாமி
மதுரை தெற்கு- ராம சீனிவாசன்
சாத்தூர்- நயினார் நாகேந்திரன்
திருச்செந்தூர்- கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்
வாசுதேவநல்லூர்- ஆனந்தன் அய்யாசாமி
ராதாபுரம்- பாலகிருஷ்ணன்
நாகர்கோவில்- பொன் ராதாகிருஷ்ணன்
விளவங்கோடு- விஜயதாரணி
ஆவடி- அஸ்வின்
திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்
தஞ்சாவூர்- கருப்பு முருகானந்தம்
திருவாரூர்- பண்ணைவயல் இளங்கோ
அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த்
ராசிபுரம்- பிரேம்குமார்
ராமநாதபுரம்- ஜி.பி.எஸ்.நாகேந்திரன்
பத்மநாபபுரம்- எட்வின் ஜோஸ்
மானாமதுரை- பொன் பாலகணபதி
இதில் குளச்சல் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஒரு வேளை இந்த தொகுதி புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா என தெரியவில்லை. இதில் அண்ணாமலை பெயர் இல்லை.
அண்ணாமலைக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்டு பெறவில்லை என்ற அதிருப்தி அவருக்கு நிலவுவதாக சொல்லப்படுகிறது. அது போல் பாஜக கூட்டங்களில் கூட அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இருந்தும் அவர் வரவில்லை என சொல்லப்படுகிறது.
-
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்!












Click it and Unblock the Notifications