இசட் பிரிவு.. அண்ணாமலைக்காக களமிறங்கும் 33 கமாண்டோக்கள்.. ரொட்டேஷன் பாதுகாப்பு.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. பாதுகாப்பு கருதி அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.
பொதுவாக நாடு முழுக்க இருக்கும் சில அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் மத்திய அரசு சார்பாக X,Y, Y+, Z, Z+, SPG போன்ற பாதுகாப்புகள் வழங்கப்படும்.
இதில் எஸ்பிஜி பாதுகாப்பு பிரதமருக்கு மட்டும் வழங்கப்பட்டு என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது பிரதமருக்காக இருக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆகும்.

பாதுகாப்பு
மற்றபடி அரசியல்வாதிகள், பிரபலங்களின் பிரபலத்தன்மை, அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பிரச்சனை, அவர்கள் உயிருக்கு இருக்கும் ஆபத்துகள், அவர்களின் அரசியல் முக்கியத்துவம் உள்ளிட்ட விஷயங்களை வைத்து அவர்களுக்கு ஏற்ற பாதுகாப்பு வழங்கப்படும். அந்த வகையில் Z+ வகை என்பது 10+ NSG கமாண்டோக்கள் மற்றும் போலீஸ் பணியாளர்கள் உட்பட 150 பணியாளர்களின் பாதுகாப்பு அளிப்பது ஆகும். முதல்வர்களுக்கு பெரும்பாலும் இந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.

முதல்வர் பாதுகாப்பு
தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு முதல்வர் என்ற அடிப்படையில் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. Z+ பாதுகாப்பில் 10+ கமாண்டோக்கள் பணிகள் இருப்பார்கள். மொத்தமாக 15 அதிகாரிகள் உடன் இருப்பார்கள். 5+க்கும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படும். இது போக தனி பாதுகாப்பு அதிகாரிகள் எனப்படும் Personal Security Officers (PSO) அதிகாரிகள் இருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கை ரகசியமாக இருக்கும். முதல்வர்களுக்கு இது போக மாநில உள்துறை சார்பாக தனி பாதுகாப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். இந்த Personal Security Officers (PSO) அதிகாரிகள்தான் முதல்வருக்கு அருகே சபாரி அணிந்து உடன் இருப்பார்கள்.

மற்ற பாதுகாப்பு
மற்றபடி இசட் வகை என்பது 4-6 NSG கமாண்டோக்கள் மற்றும் போலீஸ் பணியாளர்கள் உட்பட 55 பணியாளர்கள் பாதுகாப்பு அளிப்பது ஆகும். Y+ பிரிவு என்பது 2-4 கமாண்டோக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் உட்பட 39 பணியாளர்கள் பாதுகாப்பு அளிப்பது ஆகும். ஒய் பிரிவு என்பது 1 அல்லது 2 கமாண்டோக்கள் மற்றும் போலீஸ் பணியாளர்கள் உட்பட 28 பணியாளர்கள் பாதுகாப்பு அளிப்பது ஆகும். X வகை என்பது 12 பணியாளர்களின் பாதுகாப்பு விவரத்தில் கமாண்டோக்கள் இல்லை, ஆனால் ஆயுதம் ஏந்திய போலீசார் மட்டுமே இருப்பார்.

அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இதுவரை ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஒய் பிரிவு என்பது 1 அல்லது 2 கமாண்டோக்கள் மற்றும் போலீஸ் பணியாளர்கள் உட்பட 28 பணியாளர்கள் பாதுகாப்பு அளிப்பது ஆகும். இதுதான் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு 25 பாதுகாப்பு பணியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த பாதுகாப்பின்படி முதல் கட்டமாக 33 பாதுகாவலர்கள் அண்ணாமலைக்கு பாதுகாப்பு வழங்குவார்கள். அண்ணாமலைக்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருக்க கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications