இந்திய கம்பெனி முதலீட்டை பெற எதற்கு லண்டன்? முதல்வரின் தில்லு முல்லு முதலீடு! தமிழக பாஜக அட்டாக்
சென்னை: இந்தியாவில் இருக்கும் கம்பெனிகளிடமிருந்து முதலீடுகளைப் பெறுவதற்கு எதற்காக லண்டன் வரை சென்றீர்கள் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் முதல்வரின் தில்லு முல்லு முதலீடு என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே இருக்கும் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் விமானம் பிடித்து இன்ப சுற்றுலா சென்றீர்களா, முதல்வரே? என கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக முதல்வர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் 16 ஆம் தேதி வரை இருக்கிறார். பின்னர் 17ஆம் தேதி கிளம்பி சென்னை வருகிறார். கடந்த 11 ஆம் தேதி லண்டன் புறப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை அஜித்தின் கார் பந்தய போட்டியை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து 13ஆம் தேதி வெளிநாடு வாழ் தமிழர்களை சந்தித்தார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் எந்த மாதிரியான முதலீடுகளை இவர் ஈர்த்து விட போகிறார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் மதர்சன் நிறுவனத்துடன் ரூ 11000 கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் முன்னிலையில் 14.9.2026 அன்று இங்கிலாந்து, லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து விளக்கிக் கூறினர்.
வாகன உதிரிபாக உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres) ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், நோக்கக் கடிதமும் சேர்ந்து ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டுவருவதோடும், தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சம்வர்தனா மாதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான 'சம்வர்தனா மாதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' (Samvardhana Motherson International Limited), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L.) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மாதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள், மாதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளுடன் (Joint Venture & Technical Partners) இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன.
இத்திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், உலகளாவிய பொறியியல் நிபுணத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பக் கூட்டாண்மைகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சர்வதேச வாகன உற்பத்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சார்ந்த மதிப்புச் சங்கிலிகளுடன் (value chains) மாநிலத்தின் ஒருங்கிணைப்பை இவை வலுப்படுத்தும். இந்த முதலீடு, உயர் மதிப்புமிக்க உற்பத்தி, பொறியியல், வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கான ஒரு முக்கிய இடமாகத் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் தமிழ்நாடு அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறவும் வழிவகுக்கும்.

வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பிரிட்டனைத் (UK) தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் உற்பத்திக்கான ஒரு முன்னணி மையமாகத் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும்.
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை அமைத்திட சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்மித்ஸின் சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்படெட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் (Guidance TamilNadu) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் (Ernst & Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 'கட்டு-இயக்கு-மாற்றிஅமை-மாற்று' (Build-Operate-Transform-Transfer - BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பக்கட்ட செயல்பாடுகளுக்கும் எர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனம் ஆதரவளிக்கும். பின்னர், அம்மையம் அச்சர்வstep நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த உலகளாவிய திறன் மையம் (GCC) சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மையும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சென்னையில் உள்ள மவுண்ட்- பூந்தமல்லி சாலைப் பகுதியிலுள்ள GCC வழித்தடத்தில் அமையும்.
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.3,000 கோடி முதலீடு செய்திட விருப்பக் கடிதம்
ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்தியாவில், தான் மேற்கொள்ளவிருக்கும் ரூ.3,000 கோடி முதலீட்டிற்கு தமிழ்நாட்டையே விரும்பத்தக்க இடமாகக் கருதுவதாகத் தனது விருப்பத்தைத் தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் தனது விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தது. முன்மொழியப்பட்ட இந்த முதலீட்டைச் சாத்தியமாக்கவும், மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறுவவும் தேவையான அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகத் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்திற்கு உறுதியளித்தது.
இதில் இடம் பெற்றுள்ள மதர்சன் நிறுவனம் உத்தரப்பிரதேசத்தை அடுத்த நொய்டாவில் இருப்பதாகவும் இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய எதற்காக லண்டன் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
