ப்ளாக் பண்ணிட்டால் சரியாகிடுமா? கார் ரேஸ் நடத்த முட்டி மோதும் உதயநிதி! பரபரப்பை பற்ற வைத்த பாஜக..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உங்கள் துறையின் வளர்ச்சியைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் நடத்துவதற்கு முட்டி மோதும் உங்களுக்கு, கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டு துறையின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதியில் 180% அதிகரித்துள்ள பாஜகவைக் கேள்விக் கேட்க என்ன அருகதை இருக்கிறது" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாஜக விமர்சித்துள்ளது.

கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi Stalin DMK BJP

இந்த புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது எனவும், கடந்த 7 ஆண்டுகளில், பாஜக ஆளும் உத்தர பிரதேசத்துக்கும் - குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடிக்கு மேல் தந்து தாராளம் காட்டியிருக்கிற ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டு துறையின் நலனுக்கான ஒதுக்கப்படும் நிதியில் 180% அதிகரித்துள்ள பாஜகவைக் கேள்விக் கேட்க என்ன அருகதை இருக்கிறது" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக பாஜக-வின் அதிகாரப்பூர்வ X- வலைதளப் பக்கமான @BJP4TamilNadu -ஐ ப்ளாக் செய்துவிட்டால், எங்களால் உங்களைக் கேள்வியே கேட்க முடியாது என்று கோழைத்தனமாக எண்ணும் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களே, வணக்கம்! எந்நேரமும் பொய்யான தகவல்களை உளறுவதையும், பின் ஊடகங்கள் கேள்விக் கேட்கையில் புறமுதுகிட்டு ஓடுவதையுமே வாடிக்கையாகக்கொண்ட நீங்கள் "கேலோ இந்தியா" பற்றி இப்பொழுது ஆதாரமற்ற சில சர்ச்சைகளை எழுப்பியுள்ளீர்கள்.

முதலில் "கேலோ இந்தியா" திட்டத்திற்கான வரைமுறைகள் என்னவென்று தெரியுமா? மாநிலங்களின் கோரிக்கைகளின் பொருட்டே, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும் என்ற குறைந்தபட்ச தகவலாவது அறிவீர்களா? அதுசரி... தமிழக விளையாட்டுத் துறையின் மீது அக்கறைப் பொங்கி வழிவது போல பாசாங்கு செய்யும் திரு. உதயநிதி அவர்களே - உங்கள் துறை சம்மந்தப்பட்ட கீழ் வரும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு திராணி உள்ளதா?

இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) நடத்தும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக தமிழகம் பங்கேற்க தவறியது ஏன்? தமிழக விளையாட்டுக் கொள்கை கொண்டு வரப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று? அரசுப்பள்ளிகளில் 1:250-400 என்றிருந்த ஆசிரிய மாணவர் விகிதத்தை, 1:700 என்று மாற்றியமைத்து, உடற்கல்வி ஆசிரியர்களைக் குறைக்க உத்தரவிட்டது ஏன்?

புதுக்கோட்டை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானங்கள் மோசமான நிலையில் உள்ளது ஏன்? பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக கூறிய வாக்குறுதி என்னவாயிற்று? திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியை, மாநிலத்தின் முதல் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியாக மாற்றுவதாக கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?

மத்திய அரசை எவ்வாறு குறை கூறுவது என்று மட்டுமே ராப்பகலாக சிந்தித்துக் கொண்டிருக்கும் நீங்கள்
, தமிழகத்தின் விளையாட்டு துறையின் அவலங்களைப் பற்றி என்றுதான் சிந்திப்பீர்கள்? இவ்வாறு உங்கள் துறையின் வளர்ச்சியைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் நடத்துவதற்கு முட்டி மோதும் உங்களுக்கு, கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டு துறையின் நலனுக்கான ஒதுக்கப்படும் நிதியில் 180% அதிகரித்துள்ள பாஜகவைக் கேள்விக் கேட்க என்ன அருகதை இருக்கிறது" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+