Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது எந்த கட்சி? சின்ன சின்ன கட்சிக்கு எல்லாம்.. இடங்களை வாரி வழங்கும் பாஜக.. கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூட்டணியில் சிறிதும், பெரிதுமாக பல்வேறு கட்சிகள் இணைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இடங்களை பாஜக அள்ளிக்கொடுத்து வருகிறது.

லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

Tamil Nadu BJP giving seats to smaller parties ahead of Lok Sabha elections 2024

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை இறுதி செய்துள்ளது. பாஜக - பாமக கூட்டணி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு உறுதியாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திக்கும் என்று பாமக அறிவித்துள்ளது.

இது போக ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் ஆகியோரின் கட்சிகள் பாஜக கூட்டணியில் பங்கேற்று உள்ளன.

இடங்களை வழங்கும் பாஜக: இந்த நிலையில்தான் பாஜக கூட்டணியில் சிறிதும், பெரிதுமாக பல்வேறு கட்சிகள் இணைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இடங்களை பாஜக அள்ளிக்கொடுத்து வருகிறது.

பாஜக கூட்டணியில், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்சி பிரபலமான கட்சி கிடையாது. தமிழ்நாட்டில் இவர்களுக்கு ஒரு சதவிகிதம் வாக்கு வங்கி இருப்பது கூட உறுதியான விஷயம் கிடையாது.

இது போக பாஜக கூட்டணியில் 1 தொகுதி தான் கேட்டோம், 2 சீட் கொடுத்துள்ளனர் எனக் கூறியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இருவரும் நேற்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை

1 தொகுதி தான் கேட்டோம், 2 சீட் கொடுத்துள்ளனர் என்று டிடிவி தினகரன் சொல்லும் அளவிற்கு பாஜக இடங்களை வாரி வழங்கி வருகிறது. கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு பாஜக இடங்களை அள்ளிக்கொடுத்து வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு வேட்பாளர்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் வரிசையாக பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. முன்பே 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக முதல் கட்டமாக அறிவித்தது. இந்தப் பட்டியலில், மூன்றாவது முறையாக வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத்தின் காந்திநகரில் மீண்டும் களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவார்கள், ஸ்மிருதி இரானி 2019 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அசத்தல் வெற்றியைப் பெற்றார். ராஜஸ்தானின் கோட்டாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

28 பெண்கள், 50 வயதுக்குட்பட்ட 47 தலைவர்கள், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த 57 பேர் என 34 மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 195 பேரில், 51 பேர் அனைத்து முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், 20 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

இரண்டாம் கட்ட லிஸ்ட்: இது போக 2024 மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை மார்ச் 13 அன்று வெளியிட்டது. அனுராக் தாக்கூர், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பசவராஜ் பொம்மை, பியூஷ் கோயல், அனில் பலுனி உள்ளிட்ட 72 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

விரைவில் தமிழ்நாடு: இந்த நிலையில்தான் விரைவில் தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலை 2 - 3 நாட்களில் பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடையே ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். இதனால் எங்கே அவர் வேட்பாளராக களமிறக்கப்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+