கேபினட் எக்ஸிட்.. அய்யோ பாவம்..! இப்படி பண்ணிட்டாங்களே.. மனோ தங்கராஜை சீண்டிய பாஜக.! ஆதரவாக அதிமுக!
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் பால் வளத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் நீக்கப்பட்டு உள்ளார். தனது பணிகளை சிறப்பாக செய்ததாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருந்த நிலையில், அவரை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவரான நாராயணன் திருப்பதி.
கடந்த சில நாட்களாகவே தமிழக அமைச்சரவை மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த யூகங்கள் ஊடகங்களில் பரவி வந்த நிலையில், அதற்கு விடை கிடைத்துள்ளது. எதிர்பார்த்தபடியே தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பதவி பறிப்பு குறித்து மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்," 2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது. 2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது.
விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன்.
இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!. மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்" என கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக எதிர்ப்பு காரணமாகவே மனோ தங்கராஜ் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," பாஜகவுக்கு எதிராக பேசியதால்தான் மனோ தங்கராஜ் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நான் கருதுகிறேன். ஒருவர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றால் ஏதாவது குற்றச்சாட்டு, புகார் இருக்க வேண்டும். அல்லது துறை ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சினை இருக்க வேண்டும். அவரது பதவி நீக்க மர்மத்திற்கான காரணத்தை முதல்வர் தான் தெரிவிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது பணிகளை சிறப்பாக செய்ததாக மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து இருந்த நிலையில், அவரை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவரான நாராயணன் திருப்பதி. இதுதொடர்பாக மனோ தங்கராஜின் ட்விட்டை ரீட்வீட் செய்துள்ள அவர்,"இவ்வளவு சாதனைகளை செய்ததாக சொல்லுகிற உங்களை திமுக அமைச்சரவையிலிருந்து நீக்கியது ஏன்? நீங்கள் சொல்வதை பார்த்தால், நல்லதை செய்த உங்களை திமுக தலைமை வஞ்சித்து விட்டதாக தெரிகிறதே? ஐயோ பாவம் நீங்கள்." என கூறியுள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications