2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக பாஜக மாஸ் திட்டம்!
சென்னை: 2 நாள் பயணமாக நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் மிக உற்சாக வரவேற்பு கொடுக்க மாஸ் திட்டம் ஒன்று தயாராகவுள்ளது.
Recommended Video
ஆயிரக்கணக்கான தொண்டர்களை சாலையின் இரு மருங்கிலும் நிறுத்தி வரலாறு காணாத வரவேற்பை கொடுத்து அசத்த திட்டமிட்டுள்ளார் அண்ணாமலை.
அதற்கான பணிகளை மாவட்டத் தலைவர்கள் வசம் ஒப்படைத்துள்ள அவர், பிரதமர் பயணிக்கும் வழிகளில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.

பிரதமர் வருகை
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் பங்கேற்கவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவும் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மாலை சென்னை வருகிறார். அவருக்கு விமான நிலைய நுழைவு வாயிலில் தமிழக பாஜக சார்பில் மிக உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஹெலிபேடை சென்றடையும் பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நேரு உள்விளையாட்டரங்கிற்கு செல்கிறார்.

பாரம்பரிய கலைகள்
பிரதமர் மோடி பயணிக்கும் வழிகளில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஆயிரக்கணக்கான தொண்டர்களை சாலையின் இரு மருங்கிலும் நிறுத்தி பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதற்காக மாவட்டத் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வரும் அவர், ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஒவ்வொரு பணிகளை ஒதுக்கியுள்ளார். கடந்த மே மாதம் தமிழகம் வந்த போது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை காட்டிலும் நாளைய தினம் அதைவிட கூடுதலான வரவேற்பு கொடுக்கப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை
நாளை இரவு சென்னையில் தங்கும் பிரதமர் மோடியை பாஜக முக்கிய நிர்வாகிகளும், மாவட்டத் தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தொழிலதிபர்கள் சிலரும் சென்னையில் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஜிகே வாசன், உள்ளிட்ட இன்னும் பலர் பிரதமர் மோடியை நாளை சென்னையில் வரவேற்க இருக்கிறார்கள்.

சந்தித்துப் பேச
இதனிடையே பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஸின் ஆசை எந்தளவுக்கு நிறைவேறப் போகிறது என்ற விவரம் தெரியவில்லை. காரணம் அவர்களை சந்திப்பது பற்றி பிரதமர் மோடி தரப்பிலிருந்து இன்னும் தமிழக பாஜகவுக்கு உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்பது தான்.












Click it and Unblock the Notifications