இல்லம் செல்வோம்... உள்ளம் வெல்வோம்... தமிழக பாஜகவின் புதிய முழக்கம்... பரபரக்கும் அண்ணாமலை..!
சென்னை: இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம் என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்துள்ளார்.
Recommended Video
இதன் மூலம் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் பதவியில் அமர வேண்டும் என எண்ணுகிறார் அண்ணாமலை. அப்போது தான் கட்சியின் அடிமட்டம் வலிமைபெறும் என அவர் நம்புகிறார்.
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள்ளாக இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம் திட்டத்தை பரவலாக செயல்படுத்தி முடிக்கவுள்ளார் அவர்.

தமிழக பாஜக
தமிழகத்தில் பாஜக காலுன்ற முடியாது என திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் கூறி வந்த நிலையில், 4 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்குள் அனுப்பி வைத்து தலைமையின் பாராட்டை பெற்று இன்று மத்திய இணை அமைச்சராக ஆகியுள்ளார் எல்.முருகன். இந்நிலையில் தமிழக பாஜகவின் தற்போதைய தலைவரான அண்ணாமலைக்கு அடுத்தடுத்து பெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

சுற்றுப்பயணம்
இன்னும் இரண்டரை ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து குறைந்தது 3 எம்.பி.க்களையாவது பாஜக சார்பில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதும், இதே போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளில் பாஜகவினர் பெருமளவில் வெற்றி பெற வேண்டும் என்பதும் இப்போதைக்கு அவர் முன்னால் நிற்கும் சவால்கள். இதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாவட்ட வாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கலந்துரையாடல்
ராகுல்காந்தி, கமல்ஹாசன் பாணியில் கல்லூரி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்த தொடங்கியுள்ளார். அடுத்த கட்டமாக குக்கிராமம் முதல் பெருநகரங்கள் வரை இல்லம் செல்வோம்; உள்ளம் வெல்வோம் என்ற முழக்கத்துடன் பரப்புரை திட்டம் ஒன்றையும் தொடங்கி வைத்துள்ளார். அனைத்து தரப்பு மக்களிடமும் பாஜகவை கொண்டு சேர்க்கும் வகையில் இந்த முயற்சியை அவர் கையிலெடுத்திருக்கிறார்.

செயல்திட்டங்கள்
அமித்ஷா தன் மீது வைத்திருக்கும் மரியாதைக்கு சிறு களங்கம் கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக உள்ள அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் மனதில் வைத்து புதிய புதிய செயல்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த தொடங்கியிருக்கிறார். எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்த போது வெற்றிவேல் வீர வேல் என்ற முழக்கத்துடன் வேல் யாத்திரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications