உதயநிதிக்கு வயிற்று வலி வந்தாலும் மத்திய அரசுதான் காரணம் என்பார்கள்.. பாஜக சேகர் கிண்டல்
சென்னை: தமிழகத்தில் மின் வெட்டு ஏற்படுவதற்கு திமுக அரசின் நிர்வாகத்திறமின்மையே காரணம் என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
முறையான திட்டமிடல் இல்லாததால் இன்று தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் அதனை மறைக்க மத்திய அரசு மீது பழியை போடும் அவதூறு பிரச்சாரம் நடப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், போகிற போக்கை பார்த்தால் உதயநிதிக்கு வயிற்று வலி வந்தாலும் மத்திய அரசுதான் காரணம் என்பார்களோ என எஸ்.ஆர்.சேகர் கிண்டல் அடித்துள்ளார்.

எஸ்.ஆர்.சேகர்
தமிழக அரசு முறையாக திட்டமிடாமல் செயல்பட்டதால் தான் இந்தளவு மின் வெட்டு ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கொடுக்கவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை மக்கள் ஏற்க தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். திமுக அரசில் எங்கேயோ தவறு நடப்பதாக தாம் உணர்வதாகவும் அதனால் தான் மின் வெட்டுப் பிரச்சனை மீண்டும் தலை தூக்கியுள்ளதாகவும் கூறினார்.

இளையராஜா
இளையராஜாவை பொறுத்தவரை அவர் எல்லா பதவிக்கும் தகுதியானவர் என்றும் அவரது கருத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எழுந்ததால் திமுக இந்த விவகாரத்தில் வாயடைத்து நின்றதாகவும் கூறினார். அதேபோல் பாக்யராஜ் பேசியதிலும் எந்த தவறும் இல்லை எனக் கூறிய எஸ்.ஆர். சேகர், இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுப்பது தொடர்பான தகவல் எதுவும் தமக்கு தெரியாது எனக் கூறினார்.

இந்தி மொழி
குறிப்பிட்ட ஒரு சில மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் இந்தி தான் இணைப்பு மொழி என்றும் ஸ்டாலினை அகில உலக தலைவராக்கும் நோக்கில் அவரை வைத்து இந்தி எதிர்ப்பு அரசியல் நடந்து வருவதாக தெரிவித்தார். திமுக தலைவர்களின் வாரிசுகள் மட்டும் இந்தி படிப்பதாக கூறிய அவர் தமிழ் வளர்ச்சிக்கு இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என வினவினார்.

யூடியூப் சேனல்
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியின் வீடியோ விவரத்தை பின்வரும் லிங்கில் பார்த்து அறிந்து கொள்ளலாம். https://www.youtube.com/watch?v=xEW7cEmTKUI என்பது வீடியோ பேட்டியின் லிங்க் ஆகும்.












Click it and Unblock the Notifications