திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கினார்! கருப்பு முருகானந்தம் மீது பாஜக பெண் நிர்வாகி பாலியல் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''திருமணம் செய்வதாக கூறி என்னை கர்ப்பமாக்கினார். அதன்பிறகு கர்ப்பத்தை கலைத்துவிட்டு என்னை ஏமாற்றிவிட்டார்'' என்று தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது பாஜகவின் பெண் நிர்வாகி ஒருவர் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.

திருச்சியில் வசித்து வரும் ஒரு பெண், தமிழ்நாடு பாஜகவின் ஓபிசி அணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பாஜகவின் மேலிட தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக தேசிய தவைர் நிதின் நபின், தேசிய பொதுச்செயலாளரும், தமிழநாடு பாஜகவின் பொறுப்பாளருமான பிஎல் சந்தோஷ், அரவிந்த் மேனன் ஜி, சுதார் ரெட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரிடம் அந்த பெண் நிர்வாகி கருப்பு முருகானந்தத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

bjp karuppu muruganantham

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: '' பாஜகவின் தமிழ்நாடு பாஜகவின் பொதுச்செயலாளராக இருப்பவர் கருப்பு முருகானந்தம். இவர் என்னை ஏமாற்றிவிட்டார். நான் சிங்கிள் பேரண்ட். மாற்றுத்திறனாளியாக இருக்கும் 2 குழந்தைகளை கவனித்து கொண்டு அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். நான் கருப்பு முருகானந்தத்தை அதிகமாக நம்பினேன். கருப்பு முருகானந்தம் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். என்னுடைய குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் guardian என்று அவரது பெயர் உள்ளது. அவரை என் குழந்தைகள் 'அப்பா' என்று தான் அழைப்பார்கள்.

2026 சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் சீட் வாங்கி தருவதாக கூறினார். ஆனால் ஏமாற்றிவிட்டார். அவரது வாக்குறுதியை நம்பி தான் கர்நாடகாவில் இருந்து 2024ம் ஆண்டு திருச்சிக்கு இடம்பெயர்ந்தேன். கர்நாடகாவில் பாஜக கட்சியல் எனது மதிப்புமிக்க மாநில அளவிலான பதவியையும் துறந்து திருச்சிக்கு வந்தேன். தமிழ்நாட்டில் குடிபெயர்ந்த 2024 கருப்பு முருகானந்தம் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினார். கட்டாயமாக சில விஷயங்களை செய்ய கூறினார். அவருடனான உறவின் காரணமாக நான் கர்ப்பமானேன். என் விருப்பத்துக்கு மாறாக கருக்கலைப்பு செய்ய வலியுறுத்தினார். அவரது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மருத்துவ ஆவணங்களை திருத்தி அதனை கிடைக்காமல் செய்தார். இதுபற்றி விசாரிக்க வேண்டும்.

எனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி கேட்டபோது என்னையும், என்னுடைய குழந்தையையும் கொன்றுவிடுவதாக மிரட்டினார். இது எனக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கிறது. பெங்களூரில் உள்ள என் சொந்த வீட்டிலிருந்து என்னை வெளியேற்றவும் திட்டமிடுகிறார். மொத்தத்தில், இந்தக் கருப்பு முருகானந்தம் எல்லா வகையிலும் என்னையும் என் குழந்தைகளையும் குறிவைத்துள்ளார்.

என் குழந்தைகள் என்னுடன் இருந்தேபோதே பலமுறை என்னை பலவந்தப்படுத்தி உள்ளார். எனக்கு பாதுகாப்பு தருவதாக கூறி எனது வீட்டைக் கைப்பற்ற அவர் திட்டமிட்டு தெருவில் நிற்க வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அதற்கான ஆதாரங்களை நான் தர தயாராக இருக்கிறேன். ஒரு கட்சியின் மூத்த தலைவரின் இந்த நடவடிக்கையை உங்களிடம் கொண்டு வந்து என்னை போல் வேறு யாருக்கும் இதுபோல் நடக்க கூடாது என்பதற்காக தான் இந்த புகார் அளிக்கிறேன். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+