தமிழ்நாடு மாடல்.. விரிவாக்கப்படும் காலை சிற்றுண்டி திட்டம்.. அமைச்சர் பிடிஆர் அடிதூள் அறிவிப்பு
இதற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.
சென்னை: காலை சிற்றுண்டி திட்டம் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் பட்ஜெட்டில் வெளியிட்டு வருகிறார்,

பட்ஜெட்
அவர் தனது அறிவிப்பில், குடிமை நடப்பாண்டை போலவே அடுத்த ஆண்டும் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படும். பள்ளி கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகளும் கொண்டு வரப்படும். அறநிலையத்துறை கீழ் செயல்படும் பள்ளிகள் கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வரப்படும்.

மாணவர் சேர்க்கை
2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ.1,500 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மேம்பாட்டுக்கு ரூ.40 கோடி செலவு செய்யப்படும். ரூ.110 கோடியில் 4,5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

விரிவாக்கம்
தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் கனவு
ஸ்டாலினின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப் பள்ளிகளில் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

திட்டம் முக்கியம்
இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளிகளிள் மாணவ, மாணவியர் வருகை பதிவேடு அதிகரித்து உள்ளது. மாநில திட்டமிடல் துறை சார்பாக எடுக்கப்பட்ட சர்வேயின் கீழ் இந்த தகவல் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை 100 சதவீதம் உள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் 1,086 பள்ளிகளில் வருகை 20% வரை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் 22 பள்ளிகளில் 40% அளவிற்கு வருகை பதிவேடு உயர்ந்துள்ளது. இந்த திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு ₹12.71 ரூபாய் வரை ஒருநாளுக்கு செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications