தமிழக பட்ஜெட் 2019... மாநில வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடி
சென்னை: தமிழக அரசின் மொத்த வருவாய் செலவீனங்கள் ரூ,2,12, 035, 93 கோடியாக இருக்கும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதில், நிதி ஆதாரங்களை பெருக்க திறன்மிக்க வரி மேலாண்மை அவசியம் என்றார்.

மின் ஆளுமை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும், பதிவுத்துறையில் இணையவழி பயன்பாடுக்காக நவீன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது எனவும் கூறினார்.
மாநில சொந்த வரி வருவாயில் வணிக வரி முக்கியத்துவமானதாகும் என்றும் வணிக வருவாய் 2019-20 ல் 96,177.14 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டாஸ்மாக் மூலம் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் மதுபான கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில ஆயத்தீர்வை போக்கினை கருத்தில் கொண்டு 7262.33 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
முத்திரைத்தாள் கட்டண வருவாயில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது எனவும் முத்திரைத்தாள் தீர்வையாக, வரும் நிதியாண்டில், 11512.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார். மேலும், அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு:
- கடந்த நிதியாண்டை விட 2000 கோடி வருவாய் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்
- வாகனங்கள் மீதான வரி வருவாய், 6510.70 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்
- மாநில சொந்த வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது
- வரியல்லாத வருவாய் 13 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
- 2019-20 ல் மாநில மொத்த வருவாய் வரவுகள் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது
- மொத்த வருவாய் செலவீனங்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 35.93 கோடி ரூபாயாக இருக்கும்
- வருவாய் பற்றாக்குறை 14314.76 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது
மூலதன செலவுகளுக்கு அரசு எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வந்துள்ளதாகவும் கூறினார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications