தமிழ்நாடு பட்ஜெட் 2026 LIVE: 2.30 மணிநேரம் நடந்த தமிழக பட்ஜெட் தாக்கல் நிறைவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026-27 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட் தாக்கல் 2.30 மணிநேரம் வரை நீடித்தது. மதியம் 12.30 மணிக்கு பட்ஜெட் உரையை முடித்தார்.

தவெக அரசு தமிழகத்தில் ஆட்சியை பிடித்த பிறகு முதல்வர் விஜய் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழங்கும் ''தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம்'' அறிவிப்பட்டது. தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கியமான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்.

Tamil Nadu Budget 2026                                                    2026  Maria Wilson                                      TN Budget

Aug 05, 2026, 12:35 pm IST

2.30 மணிநேரம் நடந்த தமிழக பட்ஜெட் தாக்கல் நிறைவு

2026–27 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றது. நிதி அமைச்சர் மரிய வில்சன் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் சட்டசபை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார்.
Aug 05, 2026, 12:30 pm IST

கூடுதல் வருவாயை ஈட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – மரிய வில்சன்
Aug 05, 2026, 12:29 pm IST

தமிழகத்தின் நிதி நிலையை சீரமைக்கும் பணி தொடங்கிவிட்டது. நிதி நிர்வாகத்தை சீரமைக்க 2 ஆண்டுகள் தேவையாக உள்ளது – மரிய வில்சன்.
Aug 05, 2026, 12:29 pm IST

முந்தைய அரசு போல் இல்லாமல் நேர்மையான, திறமையான, நல்லாட்சி வழங்க உள்ளோம் – மரிய வில்சன்
Aug 05, 2026, 12:29 pm IST

தமிழகத்தின் சொந்த வருவாய் ரூ.2.54 ஆயிரம் கோடி

தமிழகத்தின் சொந்த வருவாய் ரூ.2.54 ஆயிரம் கோடியாக உள்ளது – மரிய வில்சன்.
Aug 05, 2026, 12:25 pm IST

5 ஆண்டுகளில் 3 ஆயிரம் திருக்கோவில்களுக்கு திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு நடத்தப்படும். 250 திருக்குளங்கள், 75 மரத்தேர்கள் சீரமைக்கப்படும். பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். 1000 ஆண்டுகள் பழமையான 213 திருக்கோவில்கள் புனரமைக்கப்படும்.
Aug 05, 2026, 12:22 pm IST

ஹஜ் பயணிகளுக்கான மானியம் அதிகரிப்பு

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் மானியம் ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும். கிறிஸ்தவ மற்றும் மஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் ரூ.1.05 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்படும்.
Aug 05, 2026, 12:19 pm IST

காயிதே மில்லத் விருது அறிவிப்பு

திருவள்ளுவர் நாளன்று ஆண்டுதோறும் ‘காயிதே மில்லத்’ விருது வழங்கப்படும். தமிழ் மொழி மீதான அவரது பற்றை போற்றும் வகையில் அவரது வரலாற்று பெருமைக்கு சிறப்பு மரியாதை செலுத்தும் வகையில் ‘காயிதே மில்லத்’ பெயரில் விருது வழங்கப்படும்.
Aug 05, 2026, 12:17 pm IST

ஆன்மிக பயணிகளின் வசதிக்காக திருக்கடையூர், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் நிறுவப்படும். ஆன்மி பயணிகளின் பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடத்துடன் இறையருள் பெற ரூ.60 கோடி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 12:15 pm IST

காவிரி – வைகை – தாமிரபரணியில் நதி சுற்றுலா

காவிரி, வைகை, தாமிரபரணி நதிகளில் நதி சுற்றுலா திட்டம் கொண்டு வரப்படும். இந்த திட்டம் காவிரி ஆற்றில் ஒகேனக்கல் – திருவரங்கம் இடையேயும், தாமிரபரணியில் பாபநாசம் முதல் திருநெல்வேலி வரையும், வைகையில் மதுரையிலும் செயல்படுத்தப்படும். சுற்றுலா வளர்ச்சி மற்றம் உள்ளூர் வேலைவாய்ப்புக்கு இது ஊக்கம் அளிக்கும். இதற்காக ரூ.53 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
Aug 05, 2026, 12:15 pm IST

மூத்த குடிமக்களுக்கு புனித பயணம்

ஆண்டுதோறும் மூத்த குடிமக்கள் 2.5 லட்ம் பேருக்கு புனித பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். விரும்பிய புனித தலங்களுக்கு அரசு ஏற்பாட்டில் அவர்கள் பயணம் செய்யலாம். குளிர்சாதன பயணம் தரமான தங்குமிடம், உணவு வசதி வழங்கப்படும். இதற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 12:10 pm IST

சர்வதேச சுற்றுலா நகரமாக மாற்றப்படும் மாமல்லபுரம்
Aug 05, 2026, 12:09 pm IST

அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – மரிய வில்சன்

அரசு துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அனைத்து தேர்வு முகமைகளின் ஆண்டு தேர்வு திட்டம் வெளியீடப்படும். பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலில் முழுமையாக வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படும்.
Aug 05, 2026, 12:06 pm IST

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறைக்கு ரூ.11,532 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 12:06 pm IST

போதையில்லா தமிழகத்தை உருவாக்கம் செய்ய ‘மறுவாழ்வு நிதி’ உருவாக்கம், போதைப்பழக்கத்தில் இருந்த மீள மறுவாழ்வு உதவி செய்வதற்காக ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 12:05 pm IST

காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் கட்டப்படும். 5 ஆயிரம் காவலர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.431 கோடியாக நிதி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 12:02 pm IST

திமுக அரசின் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம் ‘வெற்றி வீடு திட்டம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல் ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடியில் 70 ஆயிரம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்படும் – நிதி அமைச்சர் மரிய வில்சன்.
Aug 05, 2026, 11:58 am IST

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூ.3,609 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 11:58 am IST

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.14,830 கோடி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 11:58 am IST

ஊரக வளர்ச்சி மற்றுமு் ஊராட்சி துறைக்கு ரூ.3,609 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 11:50 am IST

100 நாள் வேலைவாய்ப்பு 150 நாட்களாக அறிவிப்பு

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ‘வெற்றி 150’ என்ற முன்முயற்சியில் 125 நாட்கள் நிறைவு செய்த நலிவற்ற, ஏழை எளிய குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் அரசு வேலை வழங்கப்படும். 125 நாட்களாக இருக்கும் வேலை நாட்கள் இனி 150 நாட்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்கிறது.
Aug 05, 2026, 11:47 am IST

நதி இணைப்பு நீர்வளம் –விவசாய வளம் திட்டத்திற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 11:47 am IST

பெண்ணையாறு – செய்யாறு பெண்ணையாறு – பாலறு மற்றும் தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 11:46 am IST

காவிரி – வைகை – குண்டாறு நதி இணைப்பு திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 11:46 am IST

பெங்களூர் – ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு, கர்நாடகா அரசுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
Aug 05, 2026, 11:43 am IST

சென்னையில் 3 மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரை

சென்னையில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – பட்டாபிராம், பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.
Aug 05, 2026, 11:40 am IST

சென்னைக்கு 1000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும். பேருந்து பணிமனைகளில் EV உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
Aug 05, 2026, 11:40 am IST

சென்னைக்கு 1000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் வழங்கப்படும்.
Aug 05, 2026, 11:40 am IST

மேகதாது உள்ளிட்ட மாநில நலன்களை பாதிக்கும் திட்டங்கள் எதிர்க்கப்படும். தமிழகத்துக்கு அனைத்து நீர் சார்ந்த திட்டங்களையும் அரசு பாதுகாக்கும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துதல், கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவாக இணைக்க வலியுறுத்தப்படும்.
Aug 05, 2026, 11:36 am IST

நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ஒதுக்கீடு
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+