ரூ.139 கோடி.. அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்.. தமிழக அரசு அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுப் பள்ளிகளில் 24 மணி நேரமும் தூய்மை மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2026-27ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்துள்ளார். தவெக் ஆட்சி அமைந்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், சாமானிய மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்த அமைச்சர் மரிய வில்சன், பட்ஜெட் அறிக்கையுடன் ஜெப மாலையையும் கொண்டு வந்தார்.

Tamil Nadu Budget 2026 2026 Maria Wilson TN Budget

இதன்பின் அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் முதல்வர் விஜய் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். 200 யூனிட் மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகளை மூடியது, தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டது. அதேபோல் மாநிலத்தின் வருவாயை பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசுப் பள்ளிகளில் சூப்பர் கிளீன் மற்றும் சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளை 24 மணி நேரமும் தூய்மையாக வைக்கவும், 24 மணி நேரமும் பாதுகாப்பான இருக்கவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 ஆயிரம் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+