Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2.30 மணி நேர பட்ஜெட் உரை.. தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் கவனிக்க வைத்த முக்கிய பாயிண்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தங்கம் தென்னரசின் இந்த பட்ஜெட் உரை சுமார் 2.22 மணி நேரம் நீடித்தது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் முக்கிய அறிவிப்புகள் என்ன... இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தமிழகம் வலியுறுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும், நல அறிவிப்புகளுக்கும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tamil nadu Budget 2026 What are the key highlights in Thangam Thennarasu 2 3 hour Budget speech

பட்ஜெட் 2026

கல்வித் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, பள்ளிக் கல்விக்கு ₹48,534 கோடியும், உயர் கல்விக்கு ₹8,505 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நலத் துறைக்கு ₹22,090 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் காரணமாக மாநிலத்தில் பிரசவத்தின்போது தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் 35ஆகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் 12ஆகவும் குறைந்துள்ளது. இவை இரண்டும் தேசியச் சராசரியை விட மிகக் குறைவு எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது சமூக முன்னேற்றத்தின் அடையாளமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலி ஆகிய ஐந்து நகரங்களில் ₹902 கோடி செலவில் அதிநவீன நூலகங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு ₹21,132 கோடியும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ₹1,471 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்குப் பதவி உயர்வுடன் கூடிய 4% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது, இது அவர்களுக்கான சமூகப் பங்களிப்பை ஊக்குவிப்பதாக உள்ளது.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதேபோல பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 27 தொகுப்புப் படைப்புகள் எளிய தமிழ் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மின்னணுப் பொருள் ஏற்றுமதியில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடன் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

தொழில்துறை

தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய இடங்களில் ₹1,070 கோடியில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், 9 மாவட்டங்களில் ₹388 கோடி செலவில் மினி ஐ.டி. பூங்காக்கள் மூலம் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். சென்னைக்கு அருகே எதிர்கால வளர்ச்சித் திட்டங்களான "தமிழ்நாடு அறிவு நகரம்" மற்றும் "உலகளாவிய நகரம்" திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் ₹706 கோடி செலவில் 18,720 தங்கம் வசதிகளோடு இந்தியாவின் மிகப் பெரிய தொழிலாளர் விடுதி கட்டுமானத்தில் உள்ளது. கோவையில் ₹81 கோடியில் தங்க ஆபரணப் பூங்காவின் முதல் கட்டப் பணிகள் நடைபெறுகின்றன. புதிய "தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை" விரைவில் வெளியிடப்படப்படும். தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுக ஆணையத்துடன் இணைந்து ₹5,200 கோடியில் கப்பல் கட்டும் மையம் உருவாகிறது.

செமிகண்டக்டர்

சென்னை ஐஐடி உடன் இணைந்து சென்னை தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படவுள்ளது. மேலும், ₹104 கோடி செலவில் 30 முதலமைச்சர் படைப்பகங்களும் ஏற்படுத்தப்படும். சென்னையின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில், ₹3,109 கோடி மதிப்பிலான புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பட்ஜெட் உரையின் இறுதியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மற்றும் நிதி மறுப்புகள் இருந்த போதிலும் மாநிலம் தொடர்ந்து மைல்கற்களை எட்டிவருகிறது. மத்திய அரசு வழங்கும் திட்டங்களின் கீழ் தமிழகத்திற்குச் சேர வேண்டிய சரியான நிதிப் பங்கு மறுக்கப்படுகிறது" என்றும் அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும், தமிழ்நாடு தனது வளர்ச்சிப் பயணத்தைத் திறம்படத் தொடர்வதாக தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+