எடைத் தேர்தலான இடைத் தேர்தல்! தபால் வாக்கு முதல் EVM வரை..வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தை ஆளும் தவெக, எதிர்க் கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டுகள் களத்தில் இருக்கும் நிலையில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் ஒவ்வொரு சுற்றின் போதும் முடிவுகள் எவ்வாறு அறிவிக்கப்படும் என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 6ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

by election 2026 TVK Dharapuram Madurantakam

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத் தேர்தலில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. இதனால் இந்த இடைத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,23,36 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 214 பேர் வாக்களித்துள்ளனர் இது என்பது புள்ளி 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல மதுராந்தகம் சட்டசபை தேர்தலில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 423 பேர் வாக்களித்துள்ளனர். இது 86.26 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பழத்தோட்ட பகுதியில் உள்ள சமூக நல மேம்பாட்டிற்கான ஒன்றிணைந்த பயிற்சி மைய வளாகத்தில் நடைபெறுகிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் நடைபெறுகிறது.

தாராபுரம் தொகுதியில் 14 மேசைகளில் 23 சுற்றுகளாகவும், மதுராந்தகம் தொகுதியில் 14 மேஜைகளில் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எனப்பட உள்ளன. இதை அடுத்து வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதலில் தபால் வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு வாக்குச் சீட்டும் காண்பிக்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்படும். அதிகமான வாக்கு பதிவு இருந்தால் தபால் வாக்கு எண்ணிக்கை ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 30வது நிமிடத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், தபால் வாக்குகளின் உறைகள் மற்றும் தேவையான ஆவணங்களை சரிபார்த்து, விதிமுறைகளுக்குப் பொருந்தாத அல்லது நிராகரிக்கப்பட வேண்டிய வாக்குகள் உரிய காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்படும். பின்னர் அந்த வாக்குகள் முகவர்களிடம் காண்பிக்கப்பட்டு வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.

தொடர்ந்து தபால் வாக்குகள் அதிகமாக இருந்தால் அவை ஒருபுறம் எண்ணப்பட, மறுபுறம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளின் படி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உரிய சரிபார்ப்புகளுக்கு பிறகு திறக்கப்படும். கண்ட்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு அலகு மூலம் வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட மேசைகளில் குறிப்பிட்ட சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்றிலும் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது கணக்கிடப்பட்டு அதன் விவரங்கள் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் நடத்தும் அலுவலரின் மேற்பார்வையில் அதன் முடிவுகள் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்படும்.

தபால் வாக்குகளும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் முழுமையாக எண்ணப்பட்ட பிறகு மொத்த வாக்கு விபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரால் வெளியிடப்படும். இதற்கிடையே சோதனைக்காக வாக்காளர்கள் தங்கள் தேர்வு செய்த வேட்பாளருக்கே வாக்கு பதிவு ஆனதா என்பதை சரி பார்க்க உதவும் வகையில் விவிபாட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் ரேண்டம் முறையில் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஏதேனும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானாலும் விவிபாட் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+