குறுக்கே வந்த தோழர்கள்.. கெத்து காட்டுமா தவெக! பழிதீர்க்குமா திமுக! 5 முனைப் போட்டியால் அதகள அரசியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலை விட மதுராந்தகம் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவிய நிலையில் இந்த முறை 5 முனைப் போட்டியில் உருவாகி இருக்கிறது. தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து கொண்டே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகள். இந்த நிலையில் 5 முனைப் போட்டி யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மூன்றாவது இடத்தை பிடிக்குமா? நான்காவது இடத்தை பிடிக்குமா? என்ற சந்தேகத்தை கிளப்பிய தவெக ஆட்சியைப் பிடித்தது.

Bypoll Dharapuram TVK Vijay

108 தொகுதிகளில் வென்ற நிலையில் தனி பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்தது. இதை அடுத்து திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய்.

முதல்வர் விஜய்

அந்த தேர்தலில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய் போட்டியிட்ட நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா, அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா, விராலிமலையில் விஜயபாஸ்கர், கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்தனர்.

இடைத் தேர்தல்

திருச்சி கிழக்குடன் சேர்த்து காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது. இதில் மதுராந்தகமும், தாராபுரமும் தனி தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால் 5 தொகுதிகளில் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மதுராந்தகத்திற்கும் தாராபுரத்துக்கும் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மரகதம் குமரவேல்

தற்போது அந்த இரு தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் மீண்டும் மதுராந்தகம் தொகுதியிலும், சத்தியபாமா தாராபுரம் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பரந்தாமன்

முன்னாள் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் மதுராந்தகத்தில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக தரப்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி தரப்பில் ஜானகிராமன் களமிறங்குகின்றனர். இதேபோல தாராபுரத்தில் திமுகவின் சுகன்யா, அதிமுகவின் பானுமதி, நாம் தமிழரின் கார்த்திகா களமிறங்குகின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு தந்த இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தீவிர ஆலோசனைக்கு பிறகு இடைத்தேர்தலை சந்திப்பதாக அறிவித்திருக்கின்றன.

5 முனைப் போட்டி

இதனையடுத்து 2 தொகுதிகளில் 5 முனைப் போட்டி உருவாகி இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்த பல கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து இருக்கின்றன. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. 2 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு என பெரிய வாக்கு வங்கி இருக்கும் நிலையில் நாம் தமிழர் விட்டுக் கொடுக்காமல் போராடும் என சொல்கின்றனர்.

விஜய் அலை

கடந்த தேர்தலில் 2 தொகுதிகளிலும் விஜய் அலையை மீறி அதிமுகவை வென்ற நிலையில் தற்போது அதே வாக்குகள் மரகதம் குமரவேலுக்கும், சத்யபாமாவுக்கும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூடுதல் போட்டியாக கம்யூனிஸ்டுகள் களமிறங்கி இருப்பது விஜய்க்கு சற்று பின்னடைவு என்கின்றனர். அதே நேரத்தில் திமுகவின் வாக்குகளைத்தான் கம்யூனிஸ்டுகள் பிரிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இப்படி 5 முனை போட்டியால் குழப்பமான சூழல் உருவாகி இருக்கும் நிலையில், யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? என்ற கேள்வி எழாமல் இல்லை. அதே நேரத்தில் இந்த கேள்விக்கான விடை இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+