பின்வாங்கிய தவெக.. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்.. கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்கள் நீக்கம்
சென்னை: சர்ச்சைகள் கிளம்பியதை அடுத்து தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் ஆகியோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தவெக நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், மாற்று கட்சி தலைவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைதேர்தல் நடக்கிறது. தவெக சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து முதல்வர் விஜய் விரைவில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

மதுராந்தகத்தில் 2 நாட்களும், தாராபுரத்தில் 2 நாட்களும் என மொத்தம் 4 நாட்கள் பிரசாரம் செய்ய விஜய் முடிவு செய்துள்ளார். இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அமைச்சர் ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலையும் தவெக வெளியிட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் தவிர மாற்று கட்சி தலைவர்களின் பெயரும் இடம் பெற்று இருந்தது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், துரை வைகோ எம்.பி. ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கூட்டணி கட்சியின் தலைவர்களை தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்று வெளியிடப்பட்டது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் விதிகளுக்கு முரணான செயல் எனவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. இதையடுத்து, தவெக நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், மாற்று கட்சி தலைவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாக்கூர் ஆகியோரது பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
