பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே.. வரும் 10 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 10 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். தமிழக நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கிறது.

தமிழக நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான தேதியை இறுதி செய்யக்கூடிய நடவடிக்கைககளில் சட்டப்பேரவை செயலகம், தமிழக முதல்வர் அலுவலகம் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu cabinet meeting cm stalin tamil nadu

வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களுக்கு முன் அனுமதி கொடுக்கப்படும். இதற்காகவே இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

கொள்கை ரீதியான, துறை ரீதியாக பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் போது, அமைச்சரவை கூட்டத்தில் இதற்காக ஒப்புதல் பெறப்படும். அந்த வகையில், துறை ரீதியாக அமைச்சர்களின் செயல்பாடுகள், புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு நிதிநிலை அறிக்கையானது இந்த மாத இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் முழு நிதிநிலை அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். எனவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் நிலையில், வரும் 10 ஆம் தேதி இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய ஓராண்டு மட்டுமே உள்ளது. திமுக அரசுவின் முழு பட்ஜெட் வரும் பட்ஜெட்தான். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில்தான் வரும் 10 ஆம் தேதி அமைச்சரவை கூடுகிறது. எனவே இந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. அது போக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாகவும் விவாதிக்கவும், முக்கிய திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+