அக்டோபர் 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவுகளுக்கு வாய்ப்பு?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்.14-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. மே 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தச் சட்டசபை கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்பதால், இந்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சட்டசபை கூட்டத்தொடர்
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் வரும் அக். 17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக, சபாநாயகர் அப்பாவு சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். முதல் நாள் மறைந்த எம்எல்ஏக்கள், பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் நிலையில், அதன் பின்னர் நடைபெறும் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்.

அமைச்சரவை கூட்டம்
இந்தச் சூழலில் இதற்கிடையே வரும் அக்.14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று இப்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டம், அக். 14 மாலை நடைபெற உள்ளது. இதில் சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்க உள்ள விஷங்கள் குறித்து அமைச்சரவையில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது.

அறிக்கை
ஜெயலலிதா மரணம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இறுதி அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்து இருந்தது. 2017ஆம் ஆண்டும் செப்டம்பரில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில்,1,798 நாட்களுக்குப் பிறகு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

மசோதா
இந்த இரு அறிக்கைகளும் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலும் அமைச்சரவை கூட்டத்தில் பெறப்படும் எனத் தெரிகிறது. அதேபோல ஆன்லைன் சூதாட்டத்திற்கு இப்போது அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டசபை கூட்டத் தொடரில் நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications