முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! TAPS திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கிறது
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த கூட்டம் நடைபெறுவதால், இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
வருகிற 20-ந்தேதி இந்த ஆண்டிற்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. முதல் நாளில் ஆளுநர் ஆர்.என். ரவி, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் உரையை வாசிக்கவிருக்கிறார். வழக்கமாக சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன், அரசு எடுத்துக் கொள்ள இருக்கும் முடிவுகளைப் பற்றி விவாதிக்க அமைச்சரவை கூடுவது நடைமுறையாக உள்ளது.

அதன்படி, இன்று காலை 11 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டில் நடைபெறும் முதலாவது அமைச்சரவை கூட்டமாக இருப்பதால், அனைத்து அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
சமீபத்தில் அரசு அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) இந்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விரிவான ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர் பிரிவுகளின் கோரிக்கைகள் குறித்து அமைச்சரவை மட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்கலாம் என்பதற்கான முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம். முக்கியமாக, சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தேர்தலுக்கு முன் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளன. எனவே, இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம், அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!











Click it and Unblock the Notifications