"மார்ச் 9" மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல்!
மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அமைச்சரவை கூட்டம்
இது தொடர்பாக ஈரோடு கிழக்கில் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கஜானாவை அதிமுக காலி செய்துவிட்டது. அது மீட்டெடுக்க தாமதம் ஆகிவிட்டது. இப்போதுதான் கஜானா மீண்டு வருகிறது. இந்த நிலையில் மார்ச் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட்
அதுமட்டுமல்லாமல் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நடப்பாண்டு முடிவதற்குள் நிறைவேற்றப்படும் என்று கூறி இருந்தார். இதனால் திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.100 உள்ளிட்ட அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல்
இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் மார்ச் 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் 2023-24ம் ஆண்டு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர்களை சந்திக்கும் அப்பாவு
அதேபோல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று மாலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அனைத்து விவரங்களையும் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications