Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கல் வருது.. இந்த பக்கம் தமிழக அரசின் மேஜர் முடிவு.. இரவே பறந்து வந்த சூப்பர் ஆர்டர்! மக்கள் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கலுக்கு இந்த முறை 1000 ரூபாய் பணத்துடன் கரும்பு, அரிசி, பருப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. எல்லா வருடமும் பொங்கல் சமயத்தில் அரசு சார்பாக சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கரும்பு, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட உள்ளது. இந்த முறை பொங்கல் பரிசு பொருட்களை வாங்கும் போது ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. டோக்கன் இருப்பவர்கள் மட்டுமே இந்த பணத்தை பெற முடியும்.

4 நாட்கள்

4 நாட்கள்

கடந்த 4 நாட்களாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த டோக்கனில் இருக்கின்ற நாளில் மட்டும் பணத்தை பெற முடியும். இன்று முதல் இந்த டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. அந்த டோக்கனில் எந்த நேரத்தில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்று இருக்கும். ரேஷன் கடை அளவு, வசதி ஆகியவற்றை வைத்து ஒரு நாளைக்கு 100 முதல் 500 பேர் வரை இப்படி டோக்கன் பெறுவார்கள். இவர்கள் அந்த டோக்கனில் இருக்கும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்றால் வரிசையில் நிற்காமல் எளிதாக பணம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

பேருந்து

பேருந்து

இன்னொரு பக்கம் பேருந்துகள் குறித்து தமிழ்நாடு அரசு சமீபத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகளை தொடங்கியது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

பொங்கல்

பொங்கல்

கடந்த 12ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை சென்னை, கோவை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 18-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த முறை பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் மக்கள் இந்த முறை அதிக அளவில் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையில் சென்னையில் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு

சிறப்பு

அதேபோல் கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் இந்த சிறப்பு பேருந்து சேவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் சென்னையில் மக்கள் மெட்ரோவை பயன்படுத்துவது அதிகம் ஆகி உள்ளது. கோயம்பேடு செல்லவும், புறநகர் செல்ல மெட்ரோவை பயன்படுத்துவதும் அதிகம் ஆகி உள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்றும், நாளையும் 12 மணி வரை இரவில் மெட்ரோ ரயில் இயங்கும். 11 மணிக்கு மூடும் மெட்ரோ சேவை இரண்டு நாட்கள் கூடுதலாக 1 மணி நேரம் இயங்கும். அதேபோல் 18ம் தேதி மெட்ரோ சேவை காலை 4 மணிக்கே தொடங்கும். அன்று பலரும் சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதால் அதிகாலையிலேயே சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+